காதல்

உடலழகு ஈர்க்க
வந்ததோர் உணர்வு
பழகி பழகி
கிடைத்ததோர் உணர்வு
இருதயத்தில் கலந்து
ரத்த நாளங்களில் ஓட
காதலெனும் உறவைத் தந்திட
உணர்வு உறவானதைப் புரிந்துகொண்டேன்
உறவில் மனதைப் பதித்தேன்
இதுவல்லவோ காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Mar-18, 4:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே