காதல்

மலர் விழியால் அவள்
பார்வையால் மலர் அம்பு
தொடுத்து என் மனத்தைக்
கவர்ந்து கொண்டாள்-அருகில்
வந்தாள், நான் சிலிர்க்க
ஆங்கிலத்தில் பேசினாள்
அது நடுநடுவே கொஞ்சும்
மழலைத் தமிழ் வார்த்தைகள்
பல சேர்த்து- ஏன், உனக்கு
நம் தமிழில் பேசத்தெரியாதா
திமிரா, மனதில்லையா என்று
கேட்டுவிடலாம் என்று எண்ணியபோது
அவள் தன்னை முழு அறிமுகம்
செய்துகொண்டாள்-அவள்
தமிழச்சியே அல்ல வடதேசத்தவள்
தமிழ்கற்க மோகம்கொண்டு அப்படி
நாடு நடுவே தமிழ்ப் பேசினாளாம்
இப்போது அவள் தமிழில் மழலை-
அப்பாவித்தனமும் தெரிந்தது
அந்த குறும்பு பார்வையில்
அவள் என்னை நேசிக்கிறான்
நான் அவளை
காதல் நாடு மொழி இவற்றை
கடந்த இன்ப உணர்வு புரியாது
வந்து சேரும் உறவு

எழுதியவர் : வாசவன்-தமிபிதான்-வாசுதேவ (20-Mar-18, 8:45 am)
Tanglish : kaadhal
பார்வை : 135

மேலே