எப்படி புரியவைப்பேன்

தீபச்சுடரை தொட்டு
விளையாட கேட்கும்
குழந்தைக்கு தீபத்தை
புரியவைக்கும் நிலையில்
என் காதல் அவளிடத்தில்
எப்படி புரியவைப்பேன்...

ஒலியறியா
செவிகளுக்கு
ஏழு சுவரங்களின்
இனிமையை புரியவைக்கும்
நிலையில்
என் காதல் அவளிடத்தில்
எப்படி புரியவைப்பேன்...

ஒளியறியா விழிகளுக்கு
மூன்றாம் பிறையின்
அழகை புரியவைக்கும்
நிலையில்
என் காதல் அவளிடத்தில்
எப்படி புரியவைப்பேன்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Mar-18, 8:55 am)
பார்வை : 833
மேலே