உலக கவிதை நாள்

வீட்டிற்கொரு கவிஞன் கூட வந்து விட்டான்
வாசிக்கும் பழக்கம் வீட்டு வாசலுக்கு கூட வரவில்லை
புலனத்தில் புலப்படும் வரிகளில் மட்டும் வாழவில்லை
கவிகள்
புலப்படும் யாவிலும்
புலப்படும் யாவுமே
கவி தான்.
கற்பனைக்கு உயிர் தருவது மட்டும்
கவியல்ல
கல்லுக்கே உயிர் தரும்
கற்பனை கூட
கவி தான்.
முன்பெலாம்
உண்மையில் கூட சில நேரம் ஒளிந்திருக்கும்
இன்று
உண்மையிலேயே ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது.....
நம் கரங்களிடம்
மனம் பேச,
ஒரு கனம்
அனுமதியுங்கள்,
கவி ஒளி....
வண்ண மயிலாகலாம்,
மழை சொரியும்
மேகமாகலாம்,
சிலருக்கு நிரந்தர துணையாகலாம்,
பலருக்கு
பழைய நண்பன் கூட திரும்ப கிடைக்கலாம்,
பேசும் மொழியில்
எழுதும் வரியில-்அது
அன்பும் தரலாம்-நீர்
ஆறுதலும் பெறலாம்-உம்
இன்ப வாயிலும் திறந்து
ஈசனைக் கூட காட்டலாம்
உமக்கென துணையாகி
ஊற்றெடுப்பாள் அவள்
என்றுமே-உன்
ஏற்றத்திற்கு
ஐயையாவாள்
ஒருநாளும்
ஓத மறக்காமல், ஓதிக் கிடந்தாலே
ஔடதமே தேவையில்லை
அது ஒன்று போதும்
அன்னை போல
அத்தனையும் செய்யும்

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (21-Mar-18, 8:11 am)
Tanglish : ulaga kavithai naal
பார்வை : 224

மேலே