குஞ்சிதபாதம் என்றால் என்ன ----------------------லண்டன் ஸ்வாமிநாதன்

குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;



சிதம்பரம் முதலிய இடங்களில் நடராஜர் காலைத் தூக்கி ஆடுவார். அப்போது வளைந்து நிற்கும் — தூக்கிய திரு அடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.



மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.



காஞ்சிப் பெரியவர் சமாதி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர் சிதம்பரம் சென்று தரிசிக்க வேண்டும் என்றார். அவரது உடல்நிலை இருக்கும் நிலையைப் பார்த்து தொண்டர்கள் மிகவும் தயங்கினர். அவரது எண்ண அலைகள் நடராஜர் காதுகளை அடையவே அற்புதம் நிகழ்ந்தது. மறு நாளே சிதம்பரம் தீட்சிதர் சிலர் பிரசாதத்துடன் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் சென்றனர்! அவர்கள் நடராஜப் பெருமானின் காலை அலங்கரிக்கும் குஞ்சித பாதத்தையும் கொண்டு வந்தனராம்; அதை அவர் தன் சிரம் மேல் வைத்து வணங்கினாராம்.



அகராதியில் இல்லாத தமிழ் சொல்!

குஞ்சிதபாதம் என்றால் என்ன? என்று தமிழ் அகராதியில் தேடினேன். ‘நடராஜரின் வளைந்த பாதம்’ என்ற செய்தி மட்டுமே வந்தது.



ஆ.சிங்காரவேலு முதலியாரின் தமிழ் என்சைக்ளோபீடியாவிலும் (அபிதான சிந்தாமணி) தேடினேன்; விக்கிபீடியாவிலும் தேடினேன்; பயனிலை.

கூகுளில் தேடினேன்— திரு, திருமதி. குஞ்சிதபாதங்கள் வந்தனர்.



இன்னும் ஆழமாகத் தேடினேன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் குஞ்சிதபாதம் கொண்டுவரச் சொன்ன சம்பவம் வந்தது.



நாங்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் சிதம்பரம் சென்ற போது மேடை மீது ஏறி நின்று நடராஜப் பெருமானையும், சிவகாமியையும் தரிசிக்க ஒரு தீட்சிதர் உதவி செய்தார். அவரிடம் குஞ்சித பாதம் கேட்ட போது அருள்கூர்ந்து கொடுத்தார். அது முழுக்க முழுக்க வெட்டிவேரினால் ஆனது- ஒரே கம கம வாசனை; இப்பொழுது எங்கள் வீட்டு சுவாமி ரூமில் (PRAYER ROOM) மணம் பரப்பி வருகிறது.



–SUBHAM

எழுதியவர் : (21-Mar-18, 7:12 pm)
பார்வை : 38

மேலே