சுதந்திர வீரன்

கையிலே வாளோடு
கண்ணிலே தீயோடு
கருப்புக் குதிரையிலே
களமாடும் வீரனிவன்..!

அகன்ற மார்போடு
அடங்காத திமிரோடு
அஞ்ச தெரியாத
ஆறடி சூரனிவன்..!

காங்கேயம் காளையின்
கட்டழகு உடம்பு..!
கார்முகில் நிறமாக
கலையான முகம்..!

மீசையின் முறுக்கால்
மிரட்டும் தோரணை..!
மின்னல் ஒளியாய்
மின்னிடும் அணிகலன்..!

வைரம் பாய்ந்த
வலுவான கரம்..!
வைராக்கியம் நிறைந்த
வலிதாங்கும் மனம்..!

தசைகள் எல்லாம்
தரமான எஃகு..!
தழும்புகள் எண்ணினால்
தாரகை தோற்கும்..!

தேகம் எல்லாம் தேக்காக
தேர் போல இருப்பவன்..!
பார் ஆண்ட பரங்கிகளை
பயந்தோட வைத்தவன்..!

நாடி நரம்பு எல்லாமே
நாட்டுப்பற்று கொண்டவன்..!
காட்டுப்புலியின் வெறியாக
காவு வாங்க துடிப்பவன்..!

ஓநாய் கூட்டமெல்லாம்
ஒதுங்கிப் போயிருங்க..!
ஒத்தையா வந்தாலும்
வித்தைகள் தெரிந்தவன்..!

வீணாய் இவனோடு
விளையாட நினைத்தால்
வினைகளை அறுப்பான்
உம் விதிகளை முடிப்பான்..!

வீணாய் இவனோடு
விளையாட நினைத்தால்
வினைகளை அறுப்பான்
உம் விதிகளை முடிப்பான்..!!!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 7:57 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 77

மேலே