திருநங்கை

ஆணின் உடலில் பெண்ணின் மனது
ஆண்டவன் பிழையில் அற்புத வடிவு
பாலின உணர்வு பசுபிக் கடலாய்
பரவிக் கிடக்கும் புனித நிலவு

தீயில் புழுவாய் தினசரி நிகழ்வு
தீண்டாமை பேச்சால் பழிக்குது உலகு
நோயில் உள்ள மனிதரை போல
நொறுங்கி போகுது இவர்கள் வாழ்வு..!

கறை படிந்த உலகினிலே
கர்ப்பப்பை இல்லாத தாயவள்..!
சிறையின் உள்ளே இல்லாமலே
சிதைந்து வாழும் கைதியவள்..!

குறை காணும் குறுகிய இதயம்
குடும்பத்தில் இவர்களை சேர்க்காததால்
இரை உண்ண வழியின்றி
யாசகம் கேட்டு தவிக்கின்றாள்..!

மடிந்துபோன மனிதமே
மறுமலர்ச்சி பெற்றிவிடு இவர்களுக்காக..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:18 pm)
Tanglish : thirunangai
பார்வை : 90

மேலே