அன்றும் இன்றும் காதல்

காமத்தின் அர்த்தம் காதலென்று
காலம் ரொம்ப கெட்டுப்போக
காவியம் தந்த காதலெல்லாம்
கானல்நீராய் மறைந்திடுச்சு..!

ராமனுக்கு ஏத்த சீதையென்று
ராகத்தில் மட்டும் பாட்டிருக்க
ராணித்தேனீ போல இன்று
மோகத்தில் காதல் மூழ்கிருக்கு..!

தூது என்ற வார்த்தையெல்லாம்
தூசு படிந்து போகிவிட
இணையதள வளர்ச்சியால்
இதயத்தில் ஏக்கம் குறைந்துபோனது..!

காகிதத்தில் கவிதை நிரப்பி
காதலை சொல்லிய அழகெல்லாம்
போகிப்பண்டிகையில் எரிந்தது போல
பொசுங்கிபோனது இன்றைய வாழ்வில்..!

அகத்தை பார்த்து காதலிப்பது
அழிந்துபோன பண்பாடு..!
முகத்தை மட்டும் பார்ப்பது
முகநூலில் இன்று செயல்பாடு..!

நகத்தை கூட தொடாத
நாகரீக காதல் வரலாறு..!
சுகத்திற்காக காதலென்று
சுருங்கிய மனது நிலைப்பாடு..!

அன்றைய காதல் ஆதவனாய்
அன்பின் ஒளி அதிகமிருக்க..!
இன்றைய காதல் நட்சத்திரமாய்
இருளில் ரசிக்க மட்டுமே..!

இன்றைய காதல் நட்சத்திரமாய்
இருளில் ரசிக்க மட்டுமே..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:19 pm)
பார்வை : 141

மேலே