என் மொழியவள்

காதலின் முடிவே காதில் கேட்க
காத்திருந்தேன் தவமாக..!
காதலி தந்த வரத்தால் நானும்
காற்றில் மிதக்கிறேன் சுகமாக..!

மௌனம் கலைத்த மந்திர பூவாய்
மனதில் அவளே மொழியாக..!
மழையில் நனையும் விளையும் பயிர்
மகிழ்ச்சியில் மூழ்குதே அழகாக..!

இதழ் பிரித்து அவள் பேச
இசையை போல கேட்கிறதே..!
இரவில் பார்த்த கனவெல்லாம்
இறைவன் அருளால் பலிக்கிறதே..!

வறண்டு கிடந்த காகிதத்தில்
வசந்த கவிதை பிறக்கிறதே..!
வாடி கிடந்த என்முகமோ
வைரம் போல ஒளிர்கிறதே..!

உருகி கிடந்த காதலுக்கு
உதட்டின் ஒலியால் உயிர் தந்தாள்..!
உறவை தேடிய பறவைக்கு
உள்ளமெனும் உலகம் தந்தாள்..!

அருவி போல அன்பை கொட்டும்
அன்னை குணத்தில் இருக்கின்றாள்..!
அழிவில் இருந்த காதல் சிறப்பை
அழகு படுத்த இணைகி்ன்றாள்..!

பசியில் உள்ள ஏழைகளுக்கு
பந்தியின் ருசி தெரியாது..!
பழகி பேச முடியாமல்
பரிதவித்தேன் அது போல..!

காதல் கடலில் தொலைந்த எனக்கு
கால நேரம் தெரியாது..!
கதிரவனாய் வந்தவள்
கரை சேர உதவினாள்..!

இரக்கம் கொண்ட அவளிதயம்
இடம் தந்தது எனக்காக..!
இருளில் மூழ்கிய வானிற்கு
வெளிச்சம் தந்தது நிலவாக..!

ஆசை கொண்ட காதலுக்கு
ஆயுள் தந்தாள் நிலையாக..!
ஆழ்மனதின் ஓசைகளுக்கு
ஆவணம் தந்தாள் மொழியாக..!

ஆழ்மனதின் ஓசைகளுக்கு
ஆவணம் தந்தாள் மொழியாக..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:33 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 187

மேலே