சுயமி காதல்

அழகான அரக்கியே..!
அறிவான கிறுக்கியே..!
அதிகார தோரணையில்
அன்பான பொறுக்கியே..!

அழகை பார்த்துத்தான் காதலித்தேன்
அன்பு தொல்லை தாங்கலயே..!
தினமும் என்னை படம்பிடித்து
திரும்ப திரும்ப காட்டுறியே..!

புன்னகை பூவாய் காதலிருக்க
புகைப்படத்தில் அதனின் வாசமில்லை..!
நினைவிலும் கனவிலும் நீயிருக்க
நிழற்படம் எனக்கு தேவையில்லை..!

பௌர்ணமி நிலவின் வெளிச்சங்கள்
பட்ட பகலில் அவசியமில்லை..!
பக்கத்திலே நீயிருக்க
படத்தை பார்க்க ஆர்வமில்லை..!

இருந்தாலும் ரசிக்கிறேன்
உன் முகம் சிரிக்கிறதே..!
உனக்காக நடிக்கும்போது
உள்மனது இனிக்கிறதே..!

உனக்காக நடிக்கும்போது
உள்மனது இனிக்கிறதே..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:44 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 124

மேலே