நியாபக பிசாசு

என்னை தேவதையாக
உயர்த்திய திருமகனே
உனக்காக ,

நரம்பு கயறு எடுத்து
காலத்தை நகராமல்
நம்மோடு இணைக்கவா ?

சரித தேகத்தில் புகுந்து
ஒளிந்து வளர்ந்த உயிரை
உயில் எழுதவா ?

குருதி ஓடும் திசையில்
இதய துடிப்பை பிணைத்து
மெட்டு ஒன்று அமைக்கவா ?

உன் பெயர் சொல்லும் பொது
பொங்கும் இன்பத்தை
நிரப்பி வைக்க
புது கிரகம் தேடவா ?

அத்தனையும் சாத்தியம்
இது சத்தியம்

ஒரே ஒரு ஐயம்
உன்னை பிரிய நேர்ந்தால்

நியாபக பிசாசு
எனக்குள் உட்க்கார்ந்து
இறங்க மறுக்கும்

எரிமலையின் உச்சகட்ட
வெட்பாமாக
உன் முத்த ஈரம்
என்னை கொழுத்தும்

சூரியனின் இரவல் ஒளியை
திருப்பி கொடுத்த அம்புலியாக
என் பாதை இருளில் மூழ்கும்

சூறாவளியில் சிக்கிய
குடிசை வீடாக
நீ தொட்ட இடங்கள் மட்டும்
சிதறி போகும்

என்னையே திண்ணும்
தனிமையிலும்
என் நிழல் கூட
உன்னோடு வாழ
ஏங்கிநின்று
தாரை தரையாக அழும்

பாவி மனது
உன்னை நினைத்து
என்ன பாடுபடும் ?

எழுதியவர் : ரதி ரதி (22-Mar-18, 11:28 am)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : niyaabaka pisasu
பார்வை : 101

மேலே