நானும் கடவுளும் - 2

கடவுளும், நானும் நடந்து சென்று கொண்டிருந்தோம் வீதி வழியே.

" கோவிந்தா ",என்றே கோஷமிடும் காவிக் கூட்டம் ஒருபுறம்,
" ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா! ",என்று பஜனைபாடும் பண்டிதர் கூட்டம் மறுபுறம்,
" ஓம் நமசிவாய ",என்று ஓயாது நச்சரிக்கும் கூட்டம் நடுவாகக் கூடிவர என்னுடன் வந்த கடவுளை காணாது சென்று கொண்டிருந்தன.

" கடவுளே! நீ இங்கிருக்க அவர்கள் யாரைத் தேடிச் செல்கிறார்கள்? ",என்றேன்.

" கடவுள் என்றால் இப்படிதான் இருப்பாரென்று எதிர்பார்ப்போடு ஓடும் கூட்டமடா.
அந்த எதிர்பார்ப்பில் அவர்கள் ஏமாறுவது நிச்சயமடா. ",என்று குறிப்பால் கூறி நகர்ந்தான் கடவுள்.

" அட! நீ ரொம்ப வித்தியாஷமான கடவுளாக இருக்கிறாயே!
எனக்கொரு சந்தேகம்?
கேட்கலாமா? ", என்றேன்.

கேளென்றான் கடவுள்.

" எந்தக்கடவுள் பெரியவன்?
சிறந்தவன்?
இஷ்லாமியக்கடவுளா?
கிறிஷ்துவக் கடவுளா?
இந்துக் கடவுளா?
அல்லது புத்தக்கடவுளா? ",என்றேன் நான்.

" நீ இதற்குப் பதில் சொல்.
பூமியின் சிலபகுதிகள் உயரமானதாக உள்ளன.
சில பகுதிகள் தாழ்வானதாக உள்ளன.
பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கியுள்ளன.
இதில் எப்பகுதிகளை சிறந்தவை என்று உன்னால் கூற இயலுமா? ",என்றான் கடவுள்.

அதெப்படி? எல்லாம் ஒன்று.

ஆம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Mar-18, 10:19 pm)
பார்வை : 607

மேலே