தமிழ்-ஹைக்கூ

முருகன்
மூன்று சங்கங்கள் ,மூவேந்தர்
வளர்ந்தாள் இவள்

மொழிகள், நாகரீகங்கள்
பல மண்ணோடு மறைய
இதுமட்டும் விதிவிலக்கு

தொன்மைவாய் இலக்கண இலக்கியம்
மரபில் வழக்கில் இன்றும்
கோடான கோடி மக்கள் உலகில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Mar-18, 8:17 am)
பார்வை : 294

மேலே