காதல்

தென்றல் வந்து
அவனைத் தொட்டது
அவன் மனதைத் தொட்டது
வந்து என்னைத் தொட்டது
என் கையில் நின்றது
அவன் விடுத்த காதல்
மடல் ஏந்தி -திரும்பி
பார்த்தேன் அவனும்
என்னைப் பார்த்தான்
'ஓ, என் காதல் தூது
கிடைக்கப்பெற்றாயோ என்னவளே?
என்றதுபோல் இருந்தது
அவன் தந்த முதல் பார்வை
என் பார்வையில் அவன் மனது
அவன் பார்வையில் என் மனது
ஈர்க்கப்பட்டு எங்கள் காதல்
பயணம் தொடங்க
எங்களை சேர்த்துவைத்த
தென்றலுக்கு நன்றி சொன்னோம்
தென்றல் சேர்த்துவைத்த
காதலர்கள் நாங்கள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Mar-18, 9:00 am)
Tanglish : kaadhal
பார்வை : 89

மேலே