நானும் கடவுளும் - 3

வேம்பும், அரசும் கூடி குலாவிய நிழலடியில் நானும் கடவுளும் அமர்ந்திருந்த நேரம், " ஏன்பா கடவுளே நீ ஒருவன் தான் என்கிறாய்?
ஆனால் உலக மக்களில் பெரும்பாலானோர் பிளவுபட்டு கிடப்பது மதங்களாலே!
மதநூல்களோ ஒன்றை ஒன்று எதிர்ப்பவையாக பிரிவையும் பிளவையும் அதிகரித்து அன்பை வேரறுப்பவையாக உள்ளனவே?
அதற்குப் பதிலென்ன சொல்கிறாய்? ", என்றேன் நான்.

" கேட்பாய் மகனே!
அதோ ஆண், பெண் இருவர் சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைக் கண்ட ஒருவர் மற்றவரிடம் போய் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
இப்படியே சேதி செவிவிட்டு செவி மாறிச் செல்கிறது.
கடைசியில் சமந்தப்பட்ட அந்த ஆண், பெண் பெற்றோரின் காதுகளை சென்றடையும் போது,
அவர்களுக்கு இடையே தவறான உறவு இருப்பதாகத் திரிபடைந்து சேர்கிறது.
உண்மையில் அவர்களில் தவறில்லை.
அவர்களைப் பற்றி புறணி பேசித் திரிபடையச் செய்த நாக்குகளில் உள்ளது தவறு.
இதுபோலே மதங்களும் திரிபடைந்துவிட்டன.
அவை சுயநலப் பேர்வழிகளால் மாற்றமடைந்துவிட்டன. ",என்றான் கடவுள்.

உண்மை தான் கடவுளே...

அன்பையே போதிக்கும் வார்த்தைகளைத் திரித்து பிரிவினைகளை விதைக்கும் எந்தவொரு நூலையும் நான் மானிடருக்கு போதிக்கவில்லை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Mar-18, 6:35 pm)
பார்வை : 554

மேலே