படைப்பு

கடவுளின் படைப்பை நினைத்து

புல்லரித்து போனதடி

என் மனது ..................

ஓர் அறிவு

ஈரறிவு

என

ஐந்தறிவு

உயிரினம் வரை

படைத்த கடவுளை

வேறு எந்த

உயிரினமும்

ஆராதிக்கவில்லை

ஆறறிவு படைத்த

மனிதனை தவிர

பெருமை பட்டு கொண்ட

கடவுளோ

ஏழுஅறிவு உயிரினத்தை படைக்க

தொடங்கையில்

ஒரு போராட்டம்

கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம்

ஏனோ

அதற்கு மேல்

படைக்க மனமில்லை

காரணம் என்னவோ

நாடு மதம் ஜாதி என எத்தனை பிளவுகள் தான் நமக்குள்

வேறு எந்த உயிரினத்தில் இல்லாத ஒன்று

அந்தி சாயும் வேளையில்

என் மனம் போன போக்கில்

நடை பாதையில்

நான்

நடை பிணமாக

பூத்து குலுங்கிய அத்தனை மலர்களும்

தலை சாய்ந்து தொங்க

என் முகமும் ..........

என்ன சாதித்து விட்ட திருப்தி நமக்குள்

அடுத்த தலைமுறை வாழ அத்தனை வளங்களையும்

அழித்து விட்ட பிறகு

எதற்கு நமக்கு வாரிசுகள்

நம்மை திட்டி தீர்க்கவா

என்

திருமண எண்ணத்தை ஒத்தி போட ......

இல்லை இல்லை வேண்டாம்

அந்த

இரு மண சந்திப்பு

ஒற்றை பாதையாகவே

இருந்து விட்டு போகட்டும்

தினம் என்னை ஏமாற்றும் இந்த உலகில்

ஏமாற்றம் ஒன்று மட்டுமாவது மிஞ்சட்டும்

ஓட்டம் தினம் புதிதல்ல

ஓடாமல் ஒரு நாள்

என் இதயம்

மட்டுமல்ல

இந்த உலகமும் இருக்கும்

அன்று பிறக்கட்டும்

ஏழுஅறிவு உயிரினம்

புது பொலிவோடு

மெய் சிலிர்க்கட்டும்

இந்த பூமி ...

......................................................................................................................

எழுதியவர் : senthilprabhu (23-Mar-18, 9:20 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : PATAIPU
பார்வை : 79

மேலே