விவசாய வியாபாரம்

விவசாயிகளின் நஷ்டத்திற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பவர்கள் வியாபாரிகள் தான்.
ஒட்டுமொத்தமாகக் கூடிப் பேசிக்கொண்டு விலையைத் தீர்மானிக்கிறார்கள்.
யாருக்கு எப்போது அறுவடை நடைபெற வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கிறார்கள்.
ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நெல் விளைஞ்சு காய்ந்திருக்க நாம் கதிரறுக்கும் இயந்திரத்தை அழைத்தால் அவர்கள் சொல்லும் பதில் ஏற்கெனவே பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பதிவு செய்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அறுத்து முடிந்த பிறகு தான் வர இயலும் என்று.

பக்கத்து வயலில் அறுக்கும் இயந்திரம் தான் என்று அழைத்தாலும் பெரிய நிலப்பரப்பை கொண்டவர்களுக்கு அறுக்கவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆக மொத்தம் என்ன பிழைப்புடா இதுனு காறித் துப்புனா அது நம்ம மேல தான் படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ளவர்களைக் கெடுக்க வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளி நாடுகளில் இருந்தோ ஆட்கள் வர வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாட்டிலேயே பக்கத்திலேயே இருக்கிறார்கள்.

அது உங்கள் உடன்பிறப்புகளாக இருக்கலாம்.
பெற்றெடுத்த பிள்ளைகளாக இருக்கலாம்.
ஒன்றுவிட்ட பெரியப்பாவாக இருக்கலாம்.
பணத்திற்கு முன்னாடி அன்பும், பாசமும் தோற்கடிக்கப்பட்டுகின்றன.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Mar-18, 4:22 pm)
Tanglish : vivasaaya vyapaaram
பார்வை : 1365

மேலே