நானும் காய்ச்சலும் - சி எம் ஜேசு

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாளில்
குளிர் சுரம் போன்று மதிய நேரத்தில் கொதித்து என் உடல் சூட்டினால் வாட்டியது என்னவென்றே
இனம் புரியாமல் தவித்தேன் .மருந்து கடையில் வாங்கிய ஒரு டோலோ 650 மாத்திரையினை போட்டு
சுரத்தை போக்கினேன் .

மீண்டும் சில நாட்கள் கடந்து அதே சுரம் .அதே மாத்திரை போட்டு சுரம் விடுபட்டது .
பின்னர் ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த சுரத்தினால் ஒரு மருத்துவ மனையினை அணுகி என்
நோயின் அறிகுறிகளை சொல்லி மாத்திரைகள் வாங்கி ஒரு ஐந்து நாட்கள் விழுங்கினேன் .

அந்த மாத்திரைகளின் மாற்றத்தால் என் சிறு நீர் மாற்றமாகி இருந்ததை உணர்ந்து உடனே
அருகில் உள்ள மற்றுமொரு தெரிந்த கிளினிக் மருத்துவரை அணுகினேன் .அவரும் ஒரு முறை
இரத்தம் டெஸ்ட்டும் சிறுநீர் டெஸ்ட்டும் தரச்சொல்லி அனுப்பி வைத்தார் .அதை போன்றே நானும்
இரண்டு டெஸ்ட்டையும் முடித்து பார்க்கையில் சுரம் சாதாரணமாகவும் ,அதேசமயம் மஞ்சள் காமாலை நோய் கொஞ்சம் இருப்பதும் தெரிய வர மருத்துவர் அதற்கான ஊசியும் மாத்திரைகளும்

எழுதி கொடுத்தார் நானும் அவைகளை தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட்டேன் .ஆனாலும்
என்னால் நிமிர்ந்து உட்க்கார முடியவில்லை ,ஜூரமும் என்னை விட்டபாடில்லை அதனால் என்
குடும்பத்தினர் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவ மனையில் சேர்த்தனர் .

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன .என் இசை வகுப்புகள் இசை பணிகள் எல்லாம் முடங்கி போயின
எத்தனையோ பொருளாதார பிரச்சனைகள் வேறு அப்படியே கிடப்பில் போடப்பட்டன .
என்ன செய்வதென்று அறியாமல் நானும் உலகை மறந்து உணர்வை எனக்கானதாக மட்டுமே
மாற்றி என்னையே நான் கவனிக்க ஆரம்பித்தேன் .

ஒபியில் ஒருநாள் பார்த்தேன் .
எத்தனையோ டெஸ்ட்டுக்கள் எல்லாவற்றிலும் ஒன்றும் இல்லை என காட்டியது .
இருந்தாலும் என் குடும்பத்தார் என்னை எளிதில் விடுவதாக தெரியவில்லை மருத்துவரிடம் சொல்லி
என்னை அதே நாளில் அட்மிட் செய்துவிட்டனர் .

நானும் நடப்பத்தெல்லாம் நன்மைக்கே என எண்ணி அமைதியானேன் .தொடர்ந்து ஒரு வாரம்
இரத்தம் டெஸ்ட்டுக்களால் அவதிக்குள்ளானேன் .இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி ஏறிய
ட்ரிப்ஸ் - களினால் கொஞ்சம் தெம்பு கிடைத்தது ,47 ஆண்டுகளுக்கு மேலாக நான் மருத்துவ மனைகளுக்கு சென்றது கிடையாது இது தான் முதல் முறை .

உடலில் என்ன காய்ச்சல் இருக்கிறது என்று எளிதில் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை
ஒரு வாரம் கழித்து உங்களுக்கு டைப்பாய்டு ஜுரம் என்றார்கள் .அப்பாடா ஒருவழியாக சுரத்தை
கண்டறிந்து மருந்துகளும் கொடுக்க ஆரம்பித்தார்கள் .நானும் படிப்படியாக சற்றே குணம் பெற்று
தேறினேன் .நடுவில் என்னை அழகு படுத்திக்கொள்வேன்.கலர் செய்து கொள்வேன் ,இப்படியாக

நானும் என்னை தேற்றி சற்றே தெளிந்த நிலையில் என்னை மருத்துவ மனையில் இருந்து விடுவித்தார்கள் ,எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி பல நாட்கள் கழித்து வீடு செல்ல நினைக்கையில்
என் வீட்டருகே ஒரு முதியவர் இறந்து விட்டார் . நானும் குடும்பத்தோடு அவரை கண்டு விட்டு
என் அறைக்கு வந்து அமைதியானேன் .

எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் என்னை ஒரு குழந்தையினை போன்று கவனித்த என்
மனைவிக்கு என் முதல் நன்றி ,அடுத்து என் தாய் என்னை அணைத்து தேற்றி தெய்வ தரிசனங்கள்
வழங்கி என்னை மீட்டெடுத்தார்கள் அவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி .

அடுத்து அடுத்து என்னை வந்து மருத்துவ மனையில் தேற்றிய என் நண்பர்கள் ,உறவுகள் சுற்றத்தார்கள் என அனைவர்க்கும் என் கோடி நன்றி .இதயம் தேறி ,இமயம் நோக்கும் இன்பம்
வந்து விட்டது .முடியாத உடம்பு முடியும் என்றாகி மீண்டும் சுழற்சிக்கு வந்திருக்கிறது .
இதற்க்கெல்லாம் ஈடாக என் அனுபவங்களை எழுத்தின் நண்பர்களுக்கு அள்ளிக்கொட்டுகிறேன்

வாழ்வும் வழியும் ஒரே நேர் சாலையில் இல்லை அது வளைந்து நெளிந்து பள்ளமாகி மேடாகி ,சில பல நேரங்களில் அடைக்கப்பட்ட வழியாகவும் உடை பட்ட பாலமாகவும் நமக்கு தெரிகிறது .அதனால்
யாவும் தெரிந்து இயற்கையின் இன்பம் சேர் இணைந்து வாழ்வோம் என்றே உங்களை அன்புடன்
அழைக்கிறேன் .என்னை தேற்றிய செலவு ஒரு லட்சம் என்றாலும் ,அவை யாவும் என் வாழ்வின்

மறு சுழற்சிக்கு வித்திட்டன என எண்ணி பூரிப்படைகிறேன் .
நன்றி தோழர்களே ,வணக்கம்

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (28-Mar-18, 10:03 pm)
பார்வை : 62

மேலே