சிலுவையில் ஓர் அன்பு

உன்னைப் பாேல் உன் அயலானை நேசி என்றார்
பாதங்களைக் கழுவி பணிவிடை செய்தார்

பணத்திற்காய் காட்டிக் காெடுக்கப்பட்டார்
மரணத் தீர்ப்பு எழுதியது மனிதம்

பாெய்ச் சாட்சிகளிற்குப் பணிந்தார்
கசையால் அடிக்கப்பட்டார்

கற்றூணில் கட்டி காறி உமிழிந்தார்கள்
பாரச் சிலுவை தாேளில் ஏற்றினார்கள்

பலமுறை விழுந்து நாெந்தழுதார்
ஆணிகளால் அறைந்தார்கள்

ஆடைகளைக் களைந்து அவமானப் படுத்தினார்கள்
சிரசில் முள்முடி சூட்டினார்கள்

தாகத்தால் தவித்தவருக்கு கசப்புக் காடி ஊட்டினார்கள்
அறியாமல் செய்கிறார்கள் மன்னியும் தந்தையே என்றார்

ஏன் என்னை கைவிட்டீர் என்று
கடைசி மூச்சில் கதறினார்

எல்லாம் நிறைவேறிற்றென்று
சிலுவையில் ஓர் அன்பு உயிர் துறந்ததன்று.

எழுதியவர் : அபி றாெஸ்னி (30-Mar-18, 9:51 am)
பார்வை : 104

மேலே