யாதும் ஊரே யாவரும் கேளிர்...

வாழ்க்கைப் பாடம் புரியவில்லை
பள்ளிப் பாடம் புரிந்தாலும்...

பாசத்திலே குளித்து பம்பரமாய்ச் சுற்றி
பரிதாபமாய் எதிர்பார்த்து நிற்பதை விட்டு

தண்ணீரில் எண்ணையாய் மிதப்பது
புரிவதில்லை தெரிவதில்லை...

காணும் காட்சியெல்லாம் தனித்தனியே
வெறும் பிம்பங்களாய்ப் பதிய வைத்து

தொடர்பின்றி காணும் நாள் எந்நாளோ?
பிறப்பிற்கும் இறப்பிற்கும் தொடர்பு காண்பது எந்நாளோ?

உறவென்ற செடிக்கு உரம் போட்டு வளர்க்காமல்
உராயாமல் இருப்பது எந்நாளோ?

எழுதியவர் : shruthi (8-Aug-11, 10:55 pm)
பார்வை : 452

மேலே