இதுவும் காதல்

இதுவும் காதல்
"""""''''""""""""'"""""""""""""
அவனை தவறவிட்ட தவிப்பு
காலம் கடந்தும் ஆறவே""
இல்லை!

இப்பவெல்லாம்
தப்பான தரவுகளே அவனைப்பற்றி மனசுமுழுக்க
வந்துபோகிறது!

உள்மன உறுத்தல்கள் அரிப்பெடுக்கையில்
அவனின் பசப்பான சம்பவங்களில்
கள்ளம் கபடங்களே அதிகம் !
உண்மைகள் அதிகமாக இருக்கும்போதும்
ஞாயம் கேட்டு காயப்படுத்த
என் காதலுக்கு விருப்பமில்லை!

தொடர்புகள் அறுந்திருந்தபோது
சகமனிதனின் ஆதரவும் ,அக்கறையும்,
சலனமாகி மனசு நேர்கோட்டில்
இருக்கவேண்டும் என்று அவசியமில்லை!
இதில் நானும் அவனும் நீங்களும்
விதி விலக்கில்லை!

இதுவரை மயக்கத்தில் இருந்துவிட்டு
உறைபனியை துடைத்தெறிந்த
இலைகள் துளிர்பதுபோல""
என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்!!!

ஆக்கம் லவன்

எழுதியவர் : (4-Apr-18, 1:01 am)
Tanglish : ithuvum kaadhal
பார்வை : 114

மேலே