ஆசை ஆசையாய்

மல்லிகையும்
மஞ்சள் குங்குமம் கலந்த
ஒருவித வாசனையும்
மருதாணி பூசிய கை கால்கள்
லேசாய் சோர்ந்துப்போன
முகவாட்டம் அதில்
வெட்கம் கலந்த புன்னகை
கையில் பால் செம்பு
தரையை பார்த்துக்கொண்டே
அறைக்குள் வந்தாள்

என் கால்களை
பணிந்து எழுந்தாள்
என் முகத்தை அவள்
பார்க்கவேயில்லை
குனிந்த தலை நிமிராமலே
இருந்தாள்

வீட்டில் எந்த ஒரு
சத்தமும் இல்லை
மெல்லிய வலையோசையும்
கால் கொலுசு சப்தமும்
அந்த நிசப்த இரவிலே
இசையாய் ஒலித்தது
என் செவிகளில்
அவள் என்னருகில்
வந்தமர்ந்தப்போது...

பேசத்தொடங்கினோம்
விடிய விடிய பேசினோம்
மெத்தை மல்லிகையும்
அவள் கூந்தல் மல்லிகையும்
இன்னும் புதிதாகவே
இருந்தது எங்கள் உள்ளங்கள்
இணைந்திருந்தப்போது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Apr-18, 8:51 am)
பார்வை : 1062

மேலே