கணிணி கண்மணிகள்

ஓர் இரவு..
என் கை கடிகாரம் 10:30'ஐத் தாண்டியிருக்கும்.
வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தேன்.
வேலை பளு, கண் சோர்வை தழுவியது.

ஏனோ, மனசு லேசாக கணக்க ஆரம்பித்தது..
சலைத்து கண் துயலா காத்திருக்கும்
இல்லாளின் உரக்கம் கெட,
இனியவன் என் இன்முகம் காணாமல் வாட,
காரணம் நான் - என்ற தவிப்பு.

அன்று இரவு வீட்டிற்கு வெகு நேரம் கழித்து சென்றேன்..
என்ன செய்வது ?
பசிக்கு உணவு உண்ட காலம் போய்..
இன்று என்னை புசித்து உழைக்க வேண்டியருக்கு.

ஓடும் நிமிடங்களுடன் நானும், உடன் ஓட..
கால தாமதம் ஆகும் என்ற கலகத்தில்
என் இதயம் ரெட்டிப்பாய் துடிக்க..
வீட்டை வந்தடைந்தேன்.

தன் கடமைகளை செய்தபின் படுக்கையை அடைந்தால் என் மனைவி..
என் குட்டிக் கும்பகர்ணன் படுக்கையில் சயனித்திருந்தான்..
என் கைபேசியில் அன்றைய கடைசி
அலுவலக பணிகளை முடித்துக் கொண்டிருந்தேன்..
ஆட்டே.. (கைபேசியின் ஒலியில்)
நிலவின் ஒலியில் சந்திரனைக் கண்டேன்..
அவன் குட்டி கண்கள் ஒரு கணம் என்னை புன்னகைத்து விட்டு மீண்டும் உறங்க தொடங்கியது..
ஏனோ மனசுக்குள் ஓர் ரீங்காரம்..
என் அன்பை அவன் நெற்றியில் பதித்து விட்டு
உறங்க தயாரானேன்..
இதை அனைத்தையும் மௌனமாக ரசித்தபடி
உறகத்திற்காக காத்திருந்தாள்!
அவள் அப்படித் தான்!!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (7-Apr-18, 10:34 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 125

மேலே