ஆறும் ஐந்திணையும்

குறிஞ்சி மகள் அவள்
முல்லை வழி கடந்து
வனம் வளர்த்து,
வளர்ந்த மலர் மங்கை .
மருதத்தின் மருமகள்
நிலமெங்கும் வளம் பெருக்க
பயிர்களுக்கு நீரூட்டி,
விளைச்சலை பிரசவித்தாள்.
பாலூட்டும் பசுவிற்கும்,
ஏரோட்டும் எருதிற்க்கும்,
உணவூட்டும் தாயும் அவள்.

அவள்
ஏரி அடைவாள் , குளம் நிறைவாள் ,
மக்கள் மனம் நிறைவாள்.
எஞ்சிநின்றால் , மிஞ்சிநின்றால்
பாலையையும் சோலை செய்வாள் .
அதுவுமன்றில் ,
யாரையுமே வஞ்சிக்காமல்,
நெய்தல் தாய்மடியில் தஞ்சமடைவாள்.
மலைமகள் எப்போதும் எங்கள்
குலமகளாய் ,....

எழுதியவர் : (9-Apr-18, 4:55 pm)
பார்வை : 35

மேலே