அவள் கொஞ்சம் கறுப்பு

அவள் கொஞ்சம் கறுப்பு
நான் குயிலின் குரலை ரசிப்பதில்லை
அதன் உருவத்தை ரசிக்கிறேன்
நான் வானவில்லை ரசிப்பதில்லை
கார் மேகத்தை ரசிக்கிறேன்

அவள் கொஞ்சம் கறுப்பு
எனக்கு ரோஜாக்களெல்லாம்
கறுப்பாக மாறிவிட ஆசை
இப்போதெல்லாம் நான் காபியில்
பால் கலந்து குடிப்பதேயில்லை

அவள் கொஞ்சம் கறுப்பு
காகங்களை ஏன்
தேசியப்பறவை
ஆக்கவில்லை
என்ற வருத்தம் எனக்கு
ஒளிக்கு கறுப்பு நிறத்தை
பூசிவிட ஆசை எனக்கு

அவள் கொஞ்சம் கருப்பு
கருமாரியம்மனும்
சுவாமி ஐயப்பனும்
என் இஷ்ட தெய்வங்கள்
அவள் கொஞ்சம் கறுப்பு
ஆனாலும் அவள் நெருப்பு.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (12-Apr-18, 11:16 pm)
பார்வை : 1181

மேலே