வா என் புத்தாண்டே -கங்கைமணி

வா !..என் புத்தாண்டே !
வலிமை கூட்டி தா என் புத்தாண்டே !
நித்தம் போரை காணும் உனக்கு
நிம்மதி கிடைக்க வாழ்த்துக்கள் என்றும்.

கலியுக தமிழன் களைப்புற்றுப்போனான்
காரணம் கேள் கண்ணீர் விடுவாய்!
நித்தம் நித்தம் ரோட்டில் கிடந்து
நிம்மதி இழந்து போராடும் நிலைமை.

ஆள்வது யார் அவனா ? இவனா ?
ஆண்டவனுக்கே புரியா கேள்வி !-
ஆனால் வீழ்வதுமட்டும் தமிழன் !.

அடக்கும்போது அடங்கிப்போகும் இனமா இது !
அடிக்கும்போது அகிம்சைபேச சொன்னது உலகம்.
ஆத்திரம்வந்தது அகிலம் ஜெயிக்க,இருந்தும்
அடங்கிப்போனோம் அடுத்தவர் சிரிக்க.

தண்ணீர் கேட்டு கண்ணீர்விட்டோம்-
புண்ணிய நதியதன் புகலிடம் காண.
ஆலையை மூட்டென அரசைகேட்டோம்
ஆயுளை குறைக்கும் நோய்களை தடுக்க.

செவிடன்காதில் சங்கென ஆனது
செய்வதறியா தவித்ததுன்னினம்.
வெடித்து சிவந்த விழியோடின்று
துடித்து எழுந்து நிர்ப்பதைப்பார் !!.

மானத்தமிழன் மார்பை உயர்த்தி-
முழக்கம் செய்யும் நிலையினைப்பார்!.
எதிரியும் யாரென அறியோம்
எம்மை அடக்குவதேனென அறியோம்.

ஆனால்....,
மரபினை மீட்டிட முனைவோம்,
மண்ணின் வளங்களை காத்திடா மடியோம்.

எம்செயல் இனிதென தொடர .உம்
அருளினால் நற்செயல் நிகழ
வாழ்த்திடு சித்திரை மக்களே!.
வணங்கினோம் நின்னருள் பெறவே !
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (14-Apr-18, 1:53 am)
பார்வை : 236

மேலே