சித்திரை மகளே வருக

இனிப்பால் துவங்கட்டும் நன்னாள்
விளம்பி மலரும் பொன்னாள்
கண்களில் தொடங்கி நம்
இதயம் தொட்டு விட
புன்னகை தேசம் பூக்கட்டும்
பசுமைக்குடில் தரணி தளிர்விட
எழில் வளம் பொங்கட்டும்
மலையருவி தரை இறங்கி
மும்மாரி மறவாமல் பொழியட்டும்
பண்பாடு மாறாமல் போற்றிடும்
பண்பு யாவற்கும் பெருகட்டும்
காடு கன்னி செழிப்பிளென்றும்
காதல் மண்ணில் நிலைக்கட்டும்
ஞாலம் நம்மில் நங்கூரமிட்டு
பாதையில் ஒளி பரப்பட்டும்
வேர்கள் துறவா விழுதுகளாய்
மரபுகள் மண்ணில் துளிர்க்கட்டும்
ஆசை பாசம் பந்தம்
ஆணி வேறாகத் திகழட்டும்
பூசல் பகை பிணி
நிர்மூல மறைவு பெறட்டும்
யாவர்க்கும் யாதும் நலமென
ஏதுவாக்கும் காலம் கனியட்டும்
தமிழுக்கு நன்றி போற்றி
உன்னை நினைக்க நானும்
என்னை மறவாத நீயும்
மகிழ்ச்சி பொங்கிட என்றும்
பைந்தமிழ் அமிழ்தினை போல்
வாழ வழிவகுத்து வாழ்வளிப்பாய்
பன்னிரண்டு திங்கள் விளம்பியாய்
முத்திரை பதிக்க வருவாய்
சித்திரை திருமகளே வருக
நல்லாசிகள் யாவர்க்கும் பொழிக.

எழுதியவர் : அருண்மொழி (14-Apr-18, 8:56 am)
பார்வை : 179

மேலே