கருப்பின் அழகே

அழகே நீ என்ன நிறம் ?
அவள் கிளிமூக்கு கொண்டதால் அழகின் நிறம் பச்சையா?
அவள் பொன்நகை அணிவதால் அழகின் நிறம் மஞ்சளா ?
அவள் புன்னகை சிந்துவதால் முகம் சிவந்ததே , அதனால் அழகின் நிறம் சிவப்பா ?
அவள் நகம் வெண்மையாய் இருப்பதால் ,அழகின் நிறம் வெண்மையா ?
அவள் கருப்பு நிற பொட்டெடுத்து
கருப்பு சேலை அணிந்தாலும் கருப்பும் அழகே
கருப்பும் அழகே
கலையான கருப்பு அழகுக்கு அழகே

எழுதியவர் : கவிராஜா (15-Apr-18, 9:37 pm)
பார்வை : 297
மேலே