இறுதி அழைப்பு

அன்பே ..
உன்னை சேர விரும்பினேன்
சேர முடியாமல் வருந்தினேன்

நீ வந்த கனவுகளை
கண்ணீரில் நனைத்தேன்
உன்னை மறக்க நினைத்தும்
மறக்க முடியாமல் நினைத்தேன்....உந்தன்
நினைவில் தவித்தேன்
நீயின்றி துடித்தேன்...

காதல் நோயில் மெல்ல
இறக்கிறேன்...என்னைக் கொல்ல துணீந்தவனாய்..நீ என்னை விட்டு போனாயே
வலிகள் சுமக்கிறேன்
அன்று உன்னை சுமந்த நெஞ்சில்

இன்று வலிகள் சுமக்கிறேன் உன்னால்...
ஏய் என் அழகு ராசா
என் செல்லமே

உன்னை காதலித்த பைத்தியம் நான்...என்னை பிரிந்த தேவனே...என் கண்ணே...என்னை மயக்கிய மாமனே...உயிரே...என்னை நீங்கி போனவனே...என் பட்டு ரோசா பூவே...என் அழகு ராசாவே...இன்றே உன்னை இறுதியாய் அழைக்கிறேன்...

என்னை ஏமாற்றாதே இம்முறையும்...உன்னை வேண்டி ...காத்திருக்கிறேன்...நீ வருவாய் என...
எந்தன் கல்லறையில்....

வந்துவிடு....வேண்டுதலோடு நான் விடுக்கும் என் இறுதி அழைப்பு இது...
வந்துவிடு என் மாமனே...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (16-Apr-18, 4:36 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : iruthi azhaippu
பார்வை : 53

மேலே