வீர ஹெப்பிடிப்பொல திசாவ

இலங்கையில் சிங்கள ஊர்களில் வசிப்பவர்களின் பெயர்கள் மிகவும் நீண்டவை . அந்த பெயரில் அவர்களின் பூர்வீகமும், ஊரின் பெயரும் பதவியும் அடங்கும். இந்த பெயர்களில் ஒன்று “ராஜபக்ச விக்கிரமசர மூடியன்ஸெளாகே பண்டாரநாயக்க மொனாரவை ஹெப்பிடிப்பொல திசாவ” என்ற பெயர். கண்டிக்கு வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள மாத்தளை நகரத்தில் அருகே அமைந்த மொனராவெல என்ற கிராமத்தில் 1776 இல் பிறப்பிடமாக கொண்ட ரதல சாதி என்ற உயர் சாதியைச் சேர்ந்தவர் ஹெப்பிடிப்பொல திசாவ ( Hepittipola Disawa ). கண்டி இராச்சியத்தின் அதிகாரி இவர் இவரை இந்த கதையில் சுருக்கமாக ஹெப்பிடிப்பொல என்று அழைப்போம் . வீர புரான் அப்பு போல் பிரித்தானியரை எதிர்த்து நின்றவர்களில் இவரும் ஒருவர்.

ஹெப்பிடிப்பொல திஸ்ஸாவின் தந்தை கோலஹேலா திஸ்ஸாவே மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கவின் ஆட்சியின் போது புத்த பல் உள்ள கண்டி தலதா மாளிகை கோவிலின் பொறுப்புள்ள அதிகாரியாகும் . தந்தையின் மரணத்திற்குப் பின்னர், ஹெப்பிடிப்பொல அந்தப் பதவியை ஏற்றார் . பின்னர் கண்டி இராச்சியத்தின் அதிகாரிகளில் ஒருவரானார். மன்னனால் கண்டி எரியில் மூல்கடித்து கொலை செய்யப் பட்ட சகோதரி குமாரிகாமி, மன்னனால் கொலை செய்யப்பட்ட அவளின் குழந்தை வீரன் மாதும பண்டார, நாடு கடத்தப் பட்ட கண்டி மன்னனின் பிரதம மந்திரி எஹலபொல ஹெபிட்டிபொலாவின் மைத்துனர், அவருடைய மாமா பிளிமத்தலாவ இப்படி கண்டி இராச்சியத்தில் உயர் பதவி வகித்தவர்கள் அவரின் இனத்தவர்கள்.

.****

1815 ம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி கண்டி ராச்சியத்தை சில அதிகாரிகளின் உதவியோடு பிரித்தானியர் சூழ்ச்சியால் கைப்பற்றி எழுதப் பட்ட 'உடரட உடன்படிக்கையில் கையொப்பமிட்ட17 அதிகாரிகளில் ஹெபிட்டிபொலவும் ஒருவர். சிலர் தமிழிலும் சிலர் சிங்களத்திலும் கையொப்பம் இட்டார்கள். மன்னர் கையொப்பம் இடவில்லை காரணம் அவர் பிரிட்டிஷ் இராணுவத்தால் கைதானார் . முழு இலங்கைத் தீவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது . ஆங்கிலம் தெரிந்தும் ஹெப்பிடிப்பொல சிங்களத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிகாரிகளுள் ஒருவராக இருந்தார். இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனது நாட்டைக் கொண்டுவருவதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. அவர் மனதில் இருந்த எண்ணம் வேறு. கண்டி மதுரை நாயக்கர் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து ஹெப்பிடிப்பொல போன்று பல அதிகாரிகள் கண்டி இராச்சியத்தைக் பிரிட்டிஷ் கைப்பற்றத் துணை போனார்கள்.

****

ஊவா மாகாணத்தின் பொறுப்பாளராக, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரு கைப்பொம்மையாக , விருப்பம் இல்லாது ஹெப்பிடிப்பொல சேவை செய்தார். 1817 ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தில் மக்கள் கிளர்ச்சி தொன்றியதுக்கு பல காரணங்கள் உண்டு

1815 இல் கண்டி ஒப்பதம் கையெழுத்தட்ட பிறகு 32 மாதங்களுக்குள் பிரித்தானிய அரசு ஓப்பந்தத்தில் எழுதியபடி செயல் படாமல் கண்டி இராச்சியத்தின் மக்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்படத் தொடங்கியது பிரிட்டிஷ் அரசு . மக்களை அடிமைகள் போல் அரசு நடத்தத் தொடங்கியது . நாம் ஏன் அந்நிய நாட்டவன் கீழ் அடங்கி வாழ வேண்டும் என்ற எண்ணம் ஊவா மக்களிடையே துளிர் விட்டு வளர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் மீது கோபம் மற்றும் அதிருப்தி மக்களிடம் கூடியது பௌத்த மதத்தை ஆதரித்து கண்டி இராச்சியத்தில் நிலவிய மரபுகள், மற்றும் விதிமுறைகளை மார்ச் 2, 1815 அன்று எழுதிய கண்டி ஒப்பந்தத்தின் படி சரியாக கடைப்பிடிக்கப் படாமை மக்களுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது . கண்டி பிரித்தானிய ஆட்சியின் பிரதான மொழிபெயர்ப்பாளர் மக்களோடு பேசி , ஜனவரி 1817 ஆம் ஆண்டில் ஊவா மாகணத்தில் நிலவிவந்த கொந்தளிப்பான சூழ்நிலையை , பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லி, அரசுக்கு எதிராக உருவாகும் எழுச்சியைப் பற்றி எச்சரித்தார். அரசு அதை கவனத்தில் எடுக்கவில்லை.

பதவியிறக்கப்பட்ட கண்டி மன்னனின் ஒரு உறவினரின் மகன் துரைசாமி, களு நாயக்கர் என்ற பெயரில் , அரியணைக்கு உரிமை கோரினார் . ஊவா மக்கள் மற்றும் ஹெப்பிடிப்பொல உற்பட சில சிங்களத் தலைவர்கள் அவரோடு சேர்ந்திருந்தார்கள்.

களு நாயக்கர் மகன் துரைசாமி, வில்பாவே எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் . இந்த உண்மைகள் பின்னர் உடுகம அனானசின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டன..

பிரிட்டிஷ் துருப்புக்களை வலுப்படுத்துவதற்காக வங்காளம் மற்றும் மெட்ராஸிலிருந்து துருப்புக்கள் வந்திறங்கின அவர்கள் கிராமங்களை எரித்தனர், சொத்துக்களை கொள்ளையடித்தனர், 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான போராளிகளும் போரில் தங்கள் உயிர்களை இழந்தனர்..

1818 ம் ஆண்டு ஊவா கலகத்துக்கு காரணமாய் இருந்த 778 போராளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் சிலர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் பிறகு கலகம் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது.

புரட்சியாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் அவர்களது உறவினர்கள் அவர்களுடைய மூதாதையர்களின் செல்வத்திலிருந்து எந்த வருவாயையும் அனுபவிப்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசிதழ் அறிவிப்பு வெளியிட்டது தங்கள் நிலங்களில் மற்றும் பண்புகள் பறிமுதல் செய்தார்.
துரதிருஷ்டவசமாக, சுதந்திரப் போராட்டத்தின் தோல்விக்கு வழிவகுத்த
மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன.

ஹாஜி மரைக்காயர்ர டிரவாலா என்ற முஸ்லீம் முகாந்திரமாக 1817 இல் சிங்களப் பகுதியான வெல்லசாவிதற்கு நியமிப்பதை சிங்கள மக்கள் விரும்பவில்லை. இருதியில் இவர் கிளர்ச்சிக்காரர்களால் கொலை செய்யப்பட்டார் வா கிளர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று . பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன. கண்டி ஜோன் டி'ஓய்லி என்ற பிரிட்டிஷ் வதிவாளரின் அறிவுரைப்படி, ஆளுநர் ராபர்ட் பிரௌன்றிக் ஹெப்பிடிப்பொலவை 500 ஆண்களுடன் கலகத்தை அடக்குவதற்காக ஊவாக்கு அனுப்பினார். எனினும், ஹெப்பிடிப்பொல கிளர்ச்சிக் காரர்களின் போராட்டம் நியாயம் எனப் பட்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று கிளர்ச்சிக்காரர்களின் தலைவரானார் அவரது ஆட்கள் அவரோடு சேர்ந்தனர், ஆனால் ஹெப்பிடிப்பொல தனது ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பிரித்தானிய ஆளுநரிடம் திருப்பி அனுப்பினார் , அவர் பிரிட்டிஷ் ஆயுதங்களை பாவிக்க விரும்பவில்லை எனக் கூறினார். ஹெப்பிடிப்பொல கிளர்ச்சி முறியடித்து முடிக்கும் வரை கலகத்தை முன்னெடுத்தார்.
மதுகல்ல உடனடியாக கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.
பதுளை அரச அதிகாரி ஆங்கிலத்தில் கல்வி கற்ற மலாய் தேசத்து முஸ்லீம் முகாந்திரம் ஹாஜி என்பவனை உவா மாகணத்தின் போக்குவரத்துக்கு அதிகாரியாக நியமனம் செய்தது சிங்கள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது காரணம் அனைத் பதவியை உவா மாகணத்தின் சிங்களவர் ர ஒருவரே வகித்து வந்தவர் . இவன் பின்னர் கிளர்ச்சியாளன் ஒருவனால் கொலை செய்யப்பட்டான்

செப்டம்பர் 1817 ல், பதுளை அரசாங்க முகவராக இருந்த சில்வெஸ்டர் வில்சன், ஊவா வெல்லஸ்சில் ஒரு மாபெரும் பின்னணி கொண்ட மலபாரி, கண்டி சிம்மாசனத்தை உரிமை கோரி வந்ததாக கேள்வி பட்டார் . பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பகாலத்தில் மன்னனின் உறவுக்காரனான துரைஸசாமி பதவி நீக்கம் செய்யப்பட்டபின் எப்படி புதியவர் ஒருவர் முடிக்கு உரிமை கேட்க முடியும். , உரிமை கேட்டவர் ஒரு முன்னாள் புத்த பிககு வில்பேவே என்று பின்னர் அரசு அறிந்தது .

அரசாங்கப் பணியாளர் சில்வெஸ்டர் வில்சன் பதுளையிலிருந்து 16.10.1817 அன்று லியுட்-நியூமன் கட்டுப்பாட்டின் கீழ் 24 ஆயுதமேந்திய படையினரோடு சென்று வெல்சேஸில் வில்பேவின் படைகளுடன் தொடர்பு கொண்டார். உவா மாகாண வெல்லஸ்ஸின் பிராந்திய மக்களைக் கொண்டிருந்த கிளர்ச்சி கும்பலுடன் அவர் பேசி நியாயப்படுத்தி , அவர்களின் எழுச்சியைத் தடுக்க முயன்றார், ஆனால் அவர்கள் அவர் பேச்சினை கேட்க மறுத்துவிட்டனர். அவர் திரும்பி பதுளைக்குச் செல்லும் வழியில், வில்சன் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க ஒரு நீரோடையில் நின்றார் . அந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய கலகக்காரர்கள் தோன்றினர். வில்சன் தற்காப்புக்காக தனது மெலாடையை அகற்றி, அவர் நிராயுதபாணியாக தொற்றமளிதார் வில்சன் எழுச்சியாளர்களை பார்த்து , அவர்களை பேச்சுவார்த்தைக்கு நெருக்கமாக வரும்படி அழைத்தார். அதற்கு பதிலாக, அவர்களில் சுமார் நாற்பது வயதிற்குட்பட்டவர்களில் சிலர் அவர்கள் முன்னேறினர். அதில் ஒருவன் வில்சனை சுட்டான். அவரின் உயிர் .பிரிந்தது

இந்த துயரத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கண்டி ஜான் டி'ஒய்லி என்ற பிரிட்டிஷ் அதிகாரி, கெப்பிட்டிப்பொலவை பிரச்னையை தீர்க்க பதுளைக்கு அனுப்பினார், கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்கும், ஊவா மாகாணத்தில் சட்ட ஒழுங்கை மீட்பதற்கும் படி அவருக்கு ஜான் டி'ஒய்லி அறிவுறுத்தினார்.

ஊவா மக்கள் கிளர்ச்சியை அடக்க ஹெப்பிடிப்பொல சில வீரர்க்ளுடனுடன் அரசு அங்கு அனுப்பியது ஊவா மாகாணத்தின் கிளர்ச்சியாளர்களின் தலிவனான கொகும்பரே ரடே ரியல் என்ற புத்திசாலித் தலைவரைச் சந்தித்து பேசினார் ஹெப்பிடிப்பொல.

அதன் பின் அங்கு நடந்தது வேறு. ஊவா மக்களோடு அவர் பேசி கிளர்ச்சியின் காரணத்தை அறிந்து அவர்கள் பக்கம் தன்னோடு வந்தவர்களோடு சேர்ந்தார் ஹெப்பிடிப்பொல, கியுள்கெதர . புட்டாவே, கொகுல்கும்புரே போன்ற பன்னிரண்டு பேர் கிளர்ச்சிக்காரரோடு ஓன்று சேர்ந்தனர். ஹெப்பிடிப்பொல பிரிட்டிஷ் அரசின் ஆயுதங்களை அவர்களுக்கு திருப்பி அனுப்பி விட்டு மக்களின் சொந்த ஆயுதங்ளோடு போராட ஆரம்பித்தனர்.

அவர் ஒரு செல்வாக்கு பெற்றவராகவும், மிகவும் உயர்ந்த ராதல சாதியை சேர்ந்தவர் கண்டி இர்ரசியத்தில் உள்ள அனைத்து முன்னணி குடும்பங்களுடனும்அவருக்கு தொடர்புன்ன்டு . அவரது மூத்த சகோதரி, குழந்தைத் தலைவரான மாடுமா பண்டாராவின் தாயார், எஹெலலபோல அவரின் மைத்துனர் , அவரது மாமா பதவியில் இருந்த மகா அதிககாரம் அல்லது பிரதமராக இருந்தவர்.
வில்பேவுக்கு சிம்மாசனத்திற்கு சட்டபூர்வமான உரிமை கிடையாது, ஆனால் அதே விதமாக ராஜாவாக பிரகடனப்படுத்தியதன் மூலம் அதைப் பெற முயன்றார்.

ஹெப்பிடிபோலவின் விசுவாசம் வில்பாவிற்கு தேவைப்பட்டது, அதனால்., ஹெப்பிடிபோல முதலாம் அதிகாரியாக வில்பேவால் நியமிக்கப்பட்டார்.

ஆளுநர் பிரவுன்றிக் 01.01.1818 அன்று பிரகடனத்தின் மூலம் பதினேழு பேர் ஊவா மாகாணத்தில் அரச படைகளுக்கு எதிராக போரிடுவதில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் விரோதிகள் , " என்று அறிவித்தார். அவர்களின் நிலங்களும் சொத்துக்களும் அரசு பறிமுதல் செய்யகிறது என்றது அந்த அறிவித்தல் .

ஹெபிட்டிப்பொலா கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்தது பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுதித்யது காரணம் அவரின் இனத்தவர்கள் பலர் அதிகாரிகளாக இருந்தனர்.
.
தான் கிரீதி ஸ்ரீ ராஜசிங்கே வழிவந்தவன் என்று சொல்லி ஹெபிடிபோலவை முதல் அதிகாரியாக நியமித்தார்
உடனே ஆளுனர் பிறவுன்ரிக் 17 பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தேசத் துரோகம் செய்தவர்கள் என்ற பிரகடனத்தை 01.01.1818 யில் வெளியிட்டார் அதில் ஹெபிடிபோலவின் பெயர் முதலாவதாகும்
.
****

ஹெப்பிட்டிபோல அனுராரதபுரத்துக்கு ஓடி ஒளிந்தார் 28.10.1818 உயில் வர கைதானார். மடுல்கலே பின் கதவால் தப்பி ஓடி விட்டார் பின் ஐந்து தினங்களுக்கு பின்னர் அளஹெர காடட்டினுள் பிடிப்ட்டார் புனித பல் பிரிட்டிஷ் கையுக்கு மாறியது
அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை நடக்கும் தினம்2013 ஆண்டு நவம்பர் 25 . அன்று காலை ஆரம்ப காலத், ஹெப்பிடிபோலவும் மற்றும் மடுல்கெலவும் புனித பல்லினை தரிசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் ஹெப்பிடிப்போலவின் வேண்டுகோளுக்கு இணங்க புனித பல்லினை மரணதண்டனை நிறை வேற்றமுன் வழிபட அரசு அனுமதித்தது . அவர்கள் இருவரும் தலதா மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள், கோவிலில் பிரார்த்தனை செய்த பின் செய்த பின்
ஒரு மைல் தூரத்தில் மரணதண்டனை நிறவேற்றும இடத்தக்கு கூட்டிச் செல்லப் பட்டனர் அங்கு அவரது தலையை கூரிய கத்தியால துண்டிக்முன் . அவர் தலை வெட்டியை பார்த்து ஒரு முறையில் தன் தலையை வெட்டி விடும் படி ஹெப்பிட்டிபோல வேண்டினார் . அனால் அது நடக்க வில்லை. இரு வெட்டில் அவரின் தலை உடலில் இருந்து பிரிந்து கீழே உருண்டது அடுத்து மடுல்கெலவின் தலையும் கூரிய கததியால துண்டிகபட்டது
வில்பா தப்பித்து, மாறு வேடத்தில் வாழ்ந்தார். அவர் 1830 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டார், மேலும் அவருக்கு எதிராக எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படவில்லை

***

பிரிட்டிஷ் ஊவா கிளர்சியை அடக்கிய பின் பழிவாங்கும் நோக்கத்தோடு 18 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்களை கொன்றார்கள் . அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன . நீர்பாசனத்தை சீரழித்தனர்.. ஆடுமாடுகளை கொன்றனர். கிணற்று நீரில் விஷம் கலந்தனர் வயல் காணிகளை அழித்தனர். ஊவா மாகணத்தில் வெலேச பாகுதி வயல் காணிகளை கொண்ண்ட இடம் . ஒரு இலட்ம் வயல் காணிக்கள் கொண்ட பகுதி என்பதில் இருந்து “வெலேச என்ற பெயர் அந்தப் பகுதிக்கு வந்தது . இன்றும் இந்தப் பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் அழிவில் இருந்து மீள வில்லை .

***

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களையும் குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து, அவர்கள் அனைவரும் சுதந்திர இலங்கைக்காக தேசப்பற்றுடன் போராடிய வீரர்கள் என இலங்கை ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெப்பட்டிப்பொல திசாவ, உற்பட பல வீரர்களே பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளினால் இவ்வாறு தேசத்துரோகிகள் என பெயர் குறிப்பிடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தவர்கள் ஆவர்.

****

1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லெஸ்ஸ புரட்சிக்கு தலைமை தாங்கியதன் காரணத்தினால் அவர்களுக்கு இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததுடன், அப்போது இலங்கையிலிருந்த பிரித்தானிய ஆளுனரான ரொபேட் பிரவுண்றிக்கினால் 1818ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட பிரகடனத்தின் மூலம் மேற்படி வீரர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என பெயர் குறிப்பிடப்பட்டனர்.

நீண்ட காலமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த பிரித்தானிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அப்பிரகடனம், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட விசேட பிரகடனத்தின் மூலம் இரத்துச் செய்யப்பட்டது.

ஆளுநர் பிறவுன்றிக் 01.01.1818 அன்று பிரகடனத்தின் மூலம் பதினேழு பேர் ஊவா மாகாணத்தில் அரச படைகளுக்கு எதிராக போரிடுவதில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் விரோதிகள் , " என்று அறிவித்தார். அவர்களின் நிலங்களும் சொத்துக்களும் அரசு பறிமுதல் செய்யகிறது என்றது அந்த அறிவித்தல் .

ஹெபிட்டிபொலா கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்தது பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்றபடுதியது காரணம் அவரின் இனத்தவர்கள் பலர் அதிகாரிகளாக இருந்தனர்
.
தான் கிரீத்தி ஸ்ரீ ராஜசிங்கே வழிவந்தவன் என்று சொல்லி ஹெபிடிபோலவை முதல் அதிகாரியாக நியமித்தார்
உடனே ஆளுனர் பிரவுன்ரிக்க 1௭ பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தேசத் துரோகம் செய்தவர்கள் என்ற பிரகடணத்தை 01.01.1818 யில் வெளியிட்டார் அதில் ஹெபிடிபோலவின் பெயர் முதலாவதாகும்

.****

ஹெபிட்டிபோல அனுராரதபுரத்துக்கு ஓடி ஒளிந்தார் 28.10.1818 உயில் வர கைதானார். மடுல்கலே பின் கதவால் தப்பி ஓடி விட்டார் பின் ஐந்து தினங்களுக்கு பின்னர் அளஹெர காட்டினுள் பிடிப்ட்டார் புனித பல் பிரிட்டிஷ் கையுக்கு மாறியது

வில்பா தப்பித்து, மாறு வேடத்தில் வாழ்ந்தார். அவர் 1830 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டார், மேலும் அவருக்கு எதிராக எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படவில்லை

***
பிரிட்டிஷ் ஊவா கிளர்ச் சியை அடக்கிய பின் பழிவாங்கும் நோக்கத்தோடு 18 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்களை கொன்றார்கள் . அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன . நீர்பாசனத்தை சீரழித்தனர்.. ஆடுமாடுகளை கொன்றனர். கிணற்று நீரில் விஷம் கலந்தனர் வயல் காணிகளை அழித்தனர். ஊவா மாகணத்தில் வெலேச பாகுதி வயல் காணிகளை கொண்ண்ட இடம் . ஒரு இலட்ம் வயல் காணிக்கள் கொண்ட பகுதி என்பதில் இருந்து “வெலேச என்ற பெயர் அந்த பகுதிக்கு வந்தது . இன்றும் இந்தப் பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் அழிவில் இருந்து மீள வில்லை .

***

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சுதந்திர இலங்கைக்காக தேசப்பற்றுடன் போராடிய வீரர்கள் என இலங்கை ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெப்பட்டிபொல உற்பட பல வீரர்களே பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளினால் இ தேசத்துரோகிகள் என பெயர் குறிப்பிடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தவர்கள் ஆவர்.

1918 ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மரண தண்டனை நிறவேற்றமுன் தலதா மாளிகையில் பிரார்த்தித்தபோது அக்கோவிலின் பிரதம குரு ஹெப்பிடிபோல செய்த தர்ம காரியங்களை எடுத்துச் சொன்னார் ஹெப்பிடிப்போல இறைவனிடம் தான் மறுபிறவியில் இமயமலையில் பிறக்கவேண்டும் என்றும், அங்கும் முக்தியடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரின் தலை துண்டிக்கப்டும் போது அவரின் தலை முடி அவர் கழுத்தில் விழாமல் இருக்கக முடிந்து கட்டிக் கொண்டார் . அவரின் தலை துண்டிக்கப்படும் போது பாலி மொழியில் பிரார்த்தனை செய்தார் . முதலாம் வெட்டில் தலை துண்டிக்கப்படவில்லை. இரண்டாம் வெட்டில் அவர் தலை துண்டிகப்பட்டு ஊயிர் பிரிந்தது . அவரின் மண்டை ஓடு அதிசயமான அமைப்பு கொண்டு இருந்ததினால் அதை இங்கிலாந்தில் உள்ள எடிங்பேர்க் பல்கலை கழகத்துக்கு எடுத்து செல்லப் பட்டது இலங்கை சுதந்திரம்1948 பெற்ற பின் அந்த மண்டை ஓடு திரும்பப் பெற்று கண்டி நூதனசாலையில் 1956 இல் புதைக்கப் பட்டது . ஒருவரும் அதைப பார்க்க முடியாது. அந்த வீரனின் மண்டை ஓடு கொழும்பு நூதன சாலையில் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டிக்குள் பலர் பார்க்கும் விதத்தில் வைத்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் உற்பட பலர் பார்த்திருக்கலாம்

****
(இது கண்டி இராச்சியத்தின் வரலாற்றின் ஒரு அங்கம்)

எழுதியவர் : பொன் குலேந்திரன் கனடா (16-Apr-18, 4:58 pm)
பார்வை : 223

மேலே