ஆஸிஃபா

பால் குடி மறந்து பிள்ளை
பள்ளி செல்லும் பருவமிது
பாலினம் பெண்ணானதால்
பலியாகிப் பாேனதுவா?
எட்டுவயது பாலனிவள்
என்ன செய்தாள் உங்களுக்கு
காமம் உங்கள் கண் மறைத்தால்
பச்சைக் குழந்தையும் மிச்சமில்லை
தீயிலெரிந்து சாம்பலாய் பாேங்கள்
பெண்மையை தீண்டி சாபம் கேட்காதீர்கள்
பெண் என்றால் புசிப்பதற்கு பண்டமல்ல
தெயவத்தின் மறுவடிவம் குழந்தை
தெய்வங்களே தீண்டப்பட்டால்
சிலைகளிங்கு என்னவாகும்?
"ஆஸிஃபா" ஒரு முடிவாகுமா?

எழுதியவர் : அபி றாெஸ்னி (16-Apr-18, 5:15 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 94

மேலே