ஒரு பக்க கதைகள் 6

பழைய ஓட்டு வீட்டில் ஒட்டு குடுத்தனம் நடத்தும் கலை.மழை வரும் போது வீடே வெள்ளத்தில் மிதக்கும்.அன்று சிவராத்திரி தான்
நான்கு வீட்டில் வேலை செய்து தன்
குடும்பத்தை தாங்குபவள்.

கலை குடும்ப தலைவி.தன் ஆசை,
சுகம், துக்கம் ,கனவுகளை தன்னோடு புதைத்து தன் மகள், மகனுக்காக அயராது உழைக்கும் ஒரு தாய். கணவனை இழந்த பெண்.தன் சொந்த ஊரையும், தன் சொந்தங்களையும் தன் கணவனுக்காக விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டாள்.
அவள் கணவனோ மிகவும் நல்லவன்.மனைவியை கஷ்டங்கள் என்றால் என்ன என்று அறியாமல்
வைத்து இருந்தான்.யார் கண்
பட்டதோ? தெரியவில்லை. வேலைக்கு செல்லும் வழியில் விபத்தில் இறந்து விட்டான்.
அந்நிலையில் மக்களுக்கோ ஐந்து வயது, மகனுக்கு மூன்று வயது.அடுத்து என்ன செய்ய
என கலங்கி நின்றாள்.இருந்த வீட்டில் இருந்து வேறு சின்ன வீட்டிற்கு மாறினாள்.பின்பு அக்கம் பக்கம் சொல்லி வைத்து வீட்டு வேலைக்கு போக ஆரம்பித்தாள்.
மகள் நான்காவது படிக்கிறாள்.மகன்
இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.
கலையின் வருமானம் மூன்று வேளை சாப்பாட்டிற்கு சரியாக உள்ளது.எப்படி குழந்தைகளை படிக்க வைக்க என யோசனை செய்தால் . வழக்கமாக அன்றும் வேலைக்கு சென்ற போது அந்த வீட்டில் இருக்கும் முதலாளி கணவனை இழந்தவள் தானே.என தவறாக நடக்க பார்த்தான்.அவள் அலறி துடித்து அவனை தள்ளி விட்டு வேகமாக ஓடி தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.
கிழிந்த ஆடையை தன் முன்தானையால் மூடி வீடு திரும்பினாள்.என்ன செய்ய?ஏது செய்ய? அனைவரிடம் சொன்னால் என்ன ஆகும்? அவன் பணக்காரன்.
திசை திருப்பிடுவான்.வேலைக்கு தான் போக மாட்டேன்.குழந்தைகளை
எப்படி வளர்க்க? கணவனை இழந்த பெண் இந்த உலகத்தில் வாழ கூடாதா? நேர்மையான வாழ முடியாத? தற்கொலை பண்ணிகலாமா? குழந்தைகள் ஐயோ என்ன செய்ய இறைவா?
என குழம்பி குழம்பி கண்ணீர் விட்டு அழுது அழுது கண்கள் சிவந்து போனது.
மறுநாள் காலை குழந்தைகளுக்கு
உணவு கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்து பின் அந்த வீட்டிற்கே வேலைக்கு சென்றாள்.முதலாளியோ அவள் நமக்கு ஒத்து வருவாள்.என நெருங்க
அவளோ அவனை துடைப்ப கட்டையால் அடித்து தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.அவன் மீண்டும் வேறு யாரிடமும் இப்படி நடக்க கூடாது.என கூறி வீட்டை நோக்கி நடந்தாள்.
அங்கு ஒரு விளம்பரத்தை சிலர்
பார்த்து கொண்டு இருக்க அவளும் சென்றாள்.என்னயா? இது. அங்கு இருந்தவர்கள் தையல் பயிற்சி இலவசம்.வருவோர் மகளிர் குழு அமைப்பை அனுக்கவும்.
நேரே அங்கு சென்று விண்ணப்பித்து பின் வீடு திரும்பினாள்.மறுநாள் அங்கே கற்பிக்க ஆரம்பித்தாள் கலை.வீட்டு வேலை செய்து கொண்டே தையல் பயிற்சியை முடித்தாள்.அங்கே தன் நிலை கூறி கடனாக தையல் இயந்திரம் பெற்றாள்.வீட்டு வேலையை விட்டு விட்டு முழு வேலையும் குறைந்த விலையில் துணிகளை தைத்து கொடுத்தாள்.
ஒன்று இல்லை பத்து பேருக்கு
இலவசமாக தையல் பயிற்சி அளித்தாள்.
தன் நிலை மாறாமல் தன்னம்பிக்கையோடு தன்னையும் தன் குழந்தைகளையும் பாதுகாத்து
முன்னேறினாள்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (17-Apr-18, 10:00 am)
பார்வை : 170

மேலே