நடிப்பு சுதேசிகள் வேசத்தால் தேசம் நாசமாகிறது…

தேசம் நாசமாகிறது
நடிப்பு சுதேசிகள் வேசத்தால்.

சிறுமியை சிதைத்தார்கள்
சீரழிவை விதைத்தார்கள்
தற்போது
நீதியை புதைக்கிறார்கள்.

புதைத்த நீதியை தொன்றினார்
தரிகாமி
துவங்கியது விசாரணை.

காவிகளும் காவால்
பாவிகளுக்கும்
கலக்கத்தை ஏற்படுத்தினார்

நேர்மையின் அடையாளமாய்
காவல் அதிகாரி ரமேஷ்

அவருக்கு துணையாய்
அடுத்த அதிகாரியும்
மிடுக்காய் வந்தார்.

துரோகிகள்
ஒன்று சேர்ந்ந்தார்கள்
சிறுமியை சீரழிக்க

நேர்மையாளர்கள்
ஒன்றிணைந்தார்கள்
நீதியை நிலைநாட்ட,

முதலில் காவிகள்
நாம் இந்து என்றார்கள்
இருவாருமே இருக்கட்டும்
என்றார்கள்.

அடுத்து நாம் பிராமணர்கள்
என்றார்கள்.
அதனால் என்ன என்று
எச்சரித்தனர் இருவரும்.

இருவரையும் எச்சரித்தார்கள்
கொலை செய்வோம்
உங்களை மட்டுமல்ல
குடும்பத்தையும் என்றார்கள்.

உறுதி குலையவில்லை
உண்மைக்காக
உயிரையும் கொடுப்போம்
ஆசிபாவிற்காக
ஆயுளே போனாலும்
அஞ்சமாட்டோம் என்றார்கள்.

விசாரணை துவாங்கியது
ஆதரங்களை சேதாரமில்லாமல் சேர்த்தனர்.
இப்போது
குற்றவாளிகள் கூண்டின் முன்.

அப்போதும் அராஜகம்.
வழக்கறிஞர்கள்
எல்லாம் வக்காலத்து
வாங்கினார்கள்
நீதியை அகற்ற.
அநீதியை ஆதரிக்க.

அங்கேயும்
அவதாரம் எடுத்தார்
ஒரு பெண் வழக்கறிஞர்
தீபிகா சிங்.

இப்போது அவருக்கு மிரட்டல்.
ஒதுங்கிவிடு இல்லையேல்
உயிரை விடு என்று.

நேர்மையாளர்களே
நியாயவான்களே
மிரட்டுபவர்களை கண்டு
அஞ்ச வேண்டாம்.

ஆசிபாவிற்காக
ஆயிரமாயிரமாய்
அப்பாக்கள்
அம்மாக்கள்
சகோதரிகள்
சகோதரர்கள்
வீதிக்கு வந்து
நியாயம்
கேட்கிறார்கள்.

எங்கும்
கேட்கும்
நியாயத்தின் குரலால்
மிரட்டியவர்கள்
மிரண்டு கிடக்கிறார்கள்
அரட்டியவர்கள்
அரண்டு கிடக்கிறார்கள்,

நியாயவான்களே
நாடே
உங்களுக்கு
பக்கபலமாய்
பாதுகாப்பாய்
இருக்கிறது.

அயோக்கியர்களே
அறிவாயுதம்
ஏந்தவந்தவர்களை
அரிவாள் ஆயுதம்
ஏந்த வைத்து
விடாதீர்
எச்சரிக்கை….

■எம்.சிவாஜி

எழுதியவர் : (17-Apr-18, 8:40 pm)
பார்வை : 38
மேலே