மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்ற நிர்மலா தேவிக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலா தேவி. தேவாங்கர் கல்லூரி மாணவிகளை 4 பெயரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் உயர் அதிகாரிகளிடம் பணிந்து போகும்படி பேசி அவர்களை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ சமீபத்தில் வெளியானது. அவை இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி பலர்க்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, நிர்மலா தேவியை விசாரிக்க அவரது இல்லம் விரைந்த விருதுநகர் காவல்துறையினரை சந்திக்காமல் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளிருந்தார். பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றதாக காவல்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இளம்பெண்களின் ஏராளமான புகைப்படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்

இந்நிலையில், அவர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28-ஆம் தேதி வரை அதாவது 12 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்

எழுதியவர் : (17-Apr-18, 8:47 pm)
பார்வை : 83
மேலே