ஒப்போ எப்7 அடுத்த பல ஆண்டுகளுக்கு பேசப்படும் ஒரு ஸ்மார்ட்போன்

இறுதியாக அடுத்த பல ஆண்டுகள் பேசப்படப்போகும் ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன் ஆன- ஒப்போ எப்7 அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய செல்பீ எக்ஸ்பெர்ட் ஆனது ஒரு நேர்த்தியான பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது கேமரா, டிஸ்பிளே மற்றும் சிறந்த மென்பொருள் அனுபவம் ஆகிய அனைத்தையும் ஒன்றாய் கொண்டுள்ளது. ஆகமொத்தம் இதனை ஒரு எதிர்காலத்தின் ஸ்மார்ட்போன் என்றே கூறலாம். அப்படியென்ன அம்சங்களை எல்லாம் ஒப்போ எப்7 கொண்டுள்ளது.?


ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த செயல்திறனை வளர்த்து எடுப்பதில் - அதுவும் பட்ஜெட் விலையில் வெளியிடுவதில் - ஒப்போவிற்கு நிகர் ஒப்போ தான் என்பதற்கு ஒப்போ எப்7 தான் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. பட்ஜெட் விலைக்குள் கிடைப்பதால் செயல்திறனில் சமரசம் இருக்குமென்று நினைக்கவேண்டாம்.

புதிய ஒப்போ எப்7 ஸ்மார்ட்ப்பனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் மாறுபாடானது ரூ.21,990/-க்கும் மறுகையில் உள்ள 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மாறுபாடானது ரூ.26,990/-க்கும் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ஒப்போ எப்7-ன் 4ஜிபி ரேம் மாறுபாட்டின் விற்பனையானது, ஏப்ரல் 9, 2018 அன்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளிலும் தொடங்கும். இதற்கிடையில் ஏப்ரல் 2, 2018 அன்று ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் ப்ளாஷ் விற்பனை ஒன்றும் நிகழ்கிறது.


இந்த விற்பனையில் ஒரு வருட இலவச திரை மாற்று, ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் கார்டு பயனர்களுக்கான 5% தள்ளுபடி, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் 120 ஜிபி அளவிலான டேட்டா நன்மை,ரூ.1200/- கேஷ்பேக், மற்றும் 0% இஎம்ஐ திட்டங்கள் ஆகியவைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சந்தையில் கிடைக்காத மேம்பட்ட ஏஐ பியூட்டி தொழில்நுட்பம் கொண்ட 25எம்பி செல்பீ கேமரா
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது, ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளின்கீழ் இயங்கும் 25எம்பி கேமராவாகும். இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். இது வெறுமனே ஒரு கிளிக்கை நிகழ்த்தாது, இந்த தொழில்நுட்பம் ஆனது உங்கள் முகத்தில் உள்ள 296 புள்ளிகளை துல்லியமான முறையில் அங்கீகரித்து, அது சார்ந்த பகுப்பாய்வை நிகழ்த்தி செல்பீக்களை கைப்பற்றும். அதாவது பாலினம், வயது, தோல் நிறம் மற்றும் தோல் வகை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை கண்டறிந்து ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பேக்களை எடுக்கும்.

எச்டிஆர் தொழில்நுட்பம் மற்றும் விவிட் பயன்முறை
ஒப்போ எப்7 கேமராவில் புதிய சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் மற்றும் விவிட் பயன்முறையும் இடம்பெற்றுள்ளது. கூறப்படும் 'சென்சார் எச்டிஆர்' தொழில்நுட்பமானது செல்பீக்களை மேம்படுத்த உதவும். இதன் கேமரா சோனி 576 சென்சார் கொண்டு வேலை செய்கிறது என்பதும் இதன் எச்டிஆர் தொழில்நுட்பமானது வண்ணங்களை அதிகரித்து மற்றும் சவாலான ஒளி நிலைகளையும் கையாளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்7-ன் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய அம்சங்களானது, கைப்பற்றும் படங்களில் உள்ள பிரகாசமான சூரிய ஒளி மற்றும் இருண்ட சூழ்நிலையில் இஆகியவைகளை யதார்த்தமாக கையாளும். மறுகையில் உள்ள ஒரு பிரத்யேகமான 'விவிட்' பயன்முறையானது செல்பீ பயனர்களை உற்சாகமூட்டும் ஒரு அம்சமாக அமைந்துள்ளது. இது செல்பீயின் பேக்கிரவுண்டில் உள்ள வண்ணங்களை அதிகரிக்க உதவுகிறது உடன் டெப்த் ஆப் பீல்ட் எனப்படும் புகைப்பட ஆழம் சார்ந்த விடயத்திலும் கவனம் செலுத்துகிறது.

கலர்ஓஎஸ் 5.0 உடனான பேஸ் அன்லாக்
ஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும். இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7 ஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

திரும்பி பார்க்க வைக்கும் வடிவமைப்பு மற்றும் அதிவேக காட்சி அனுபவம்
ஒப்போ எப்7-ன் வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே வகையானது, ஒரு ஸ்மார்ட்போனின் எல்லைகளை தள்ளுகிறது என்றே கூறலாம். ஒப்போ எப்7 ஒரு 6.23 அங்குல முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் திரை விகிதம் 19.9 ஆகும். இது எந்தவொரு ஸ்மார்ட்போனும் வழங்காத விஷுவல் அனுபவத்தை வழங்கும் ஒப்போ எப்7 உடன், நீங்கள் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களைக் காணலாம் மற்றும் அதிவேக அனுபவம் மிக்க கேம்ஸ்களையும் விளையாடலாம்.

எல்லாவற்றையும் வேகமாக செய்ய உதவும் சக்திவாய்ந்த வன்பொருள்

ஒப்போ எப்7-ன் சக்திவாய்ந்த வன்பொருளானது, இதர அம்சங்களை காட்டிலும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இதன் 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் ஆனது மல்டிடாஸ்கிங்கை நிகழ்த்த போதுமானதாக உள்ளது. அடிப்படையிலேயே திறன்மிக்க வன்பொருள் மற்றும் ஏஐ ஆற்றல் ஆகியவற்றால், இதன் கேமராவும் வேகமான செயல்படும். ஒப்போ எப்7-ன் முன்னோடியான எப்5 ஸ்மார்ட்போனை விட 80 சதவீதம் சிறந்த செயல்திறனை வழங்கும்.

ஒப்போ எப்7 ஒரு 3400எம்ஏஎச் பேட்டரி அலகுடன் ஆதரிக்கப்படுகிறது மற்றும் மூன்று கவர்ச்சிகரமான நிற வகைகளில் - சோலார் ரெட், மூன்லைட் சில்வர் மற்றும் சிறப்பு டயமண்ட் பிளாக் பதிப்பு - வாங்க கிடைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாறுபாட்டின் முதல் விற்பனை ஏப்ரல் 9, 2018 அன்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளிலும் தொடங்கும்.


By: Muthuraj

எழுதியவர் : (17-Apr-18, 8:56 pm)
பார்வை : 24

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே