அழகு தனிகா

அழகோ அழகு
புன்னகை ஓர் அழகு
பார்க்கும் பார்வையாலே கொக்கிபோட்டாளே
மாட்டியது மீனல்ல .. நான்
நான் மட்டுமல்ல
ஆடவர் கூட்டமும் தான்
மாட்டிக்கொள்ளவே துடிக்கும் கூட்டமிது
பேசிக்கொள்ள ஆசை வருமே
அவளுடன் ராசியாக
ராசிக்கல் மோதிரம் தான் வேண்டுமா ?
இல்லை
அவள் இமை தீட்டிய மை போல
அவளை ஓவியமாய் தீட்ட ரவிவர்மனிடம் திட்டம் கேட்கவா?
மெல்லிய புன்னகையில்
மெல்ல சாய்த்தாளே
பேசிய வார்த்தையெல்லாம்
தேனாக பாய்ந்ததே
போதும் என்னைக் கொல்லாதே
வானவில்லை நிமிர்த்தாதே
மனதை ஓடிக்காதே வைசாலி ...

எழுதியவர் : கவிராஜா (17-Apr-18, 10:28 pm)
பார்வை : 245
மேலே