வலையற்சிந்து
வலையற்சிந்து
================
விலங்கினையே உடைத்தெரிந்து
விடுதலையே பெற்றோம் – கொடு
வினையறுத்தே விட்டோம் - புது
விடியலுமே யுற்றோம் - அதை
வெறும்பயல்கள் அனுபவிக்க
விதிஎனவே விற்றோம்
*
உலகமெலாம் வியப்படைய
உரியவற்றைக் கொண்டு – நாம்
உயர்வடைவோ மென்று – குரல்
உயர்த்தியவர் இன்று – தாம்
உயர்ந்திருக்க பொதுசனமோ
உலர்ந்ததுவே நன்று.

