கல்லூரிக் கானங்கள்

எம் அன்பின்
தோழமை சகோதர சகோதரிகளே!
தங்களின் பார்வைகள் பல
அன்புக் கலந்த பண்புகள் சில
கனியேன உரைப்பீர்கள்!
மாறாவிடில் கர்ஜிக்கவும் செய்வீர்கள்!
தடம் மாறயில தட்டிக் கேட்டீர்கள்!
தடுமாறாயில தாங்கிப் பிடித்தீர்கள்!
உம்முடன்
பழகிய நாட்களில் கிடைத்த இதம்!
முதல் நாள் பார்த்த போதே கொண்ட ஈர்ப்பு!
பிரிந்த நாட்களிலும் பிரியாத நம் நட்பின் பந்தம்!
மேஜையில் அமரும் போது எதிர்பார்த்து கிட்டிய நெருக்கம்!
பூவேன நம் நட்பினை சுவாசித்த தருணங்கள்!
கவலை மறக்க நாம் அடித்த அரட்டைகள்!
நட்பின் மேல் காதல் கொண்ட சில மையல் கானங்கள்!
மின்னும் வைரமாய் உம்மில் கிடைத்து சகோதர நட்பு!
தேர்வறையில் தேடிய சொந்தம்!
கார்ப்பரேட்டைக் கட்டடித்து எம்முடன் விளையாடிய கால்பந்துக் காலங்கள்!
ஜீன்சில் சிக்கிய சில தருணங்கள்!
விளையாட்டில் வீருக் கொண்டு எழுந்த நிமிடங்கள்!
எதிர்பாரா தோழமையின் உறவில் எற்பட்ட மரணங்கள்!
லைபிரேரி அமைதியில் கிட்டிய தூக்கம்!
கேன்டின் கேமராவில் சிக்காத நம் முகம்!
இவையாவும்
எம்முடன் நீங்கள் பிரிந்தாலும்
என்றும்
பிரியாத தருணங்கள்!

இங்கு
நண்பனின் தயவால்
வேர்க்கொண்டது சிலக் காதல்கள்!
இடையில் முறிந்துப் போன சிலக் காதல்கள்!
சில விடைத் தெரியாமலே போனக் காதல்கள்!
பல சொல்லப் படாத ஒருத்தலைக் காதல்கள்!
இவையாவும்
மீண்டு வருமா!
மீண்டு மொருமுறை!

நாங்கள் எடுத்து வருவோம் !
மதிய உணவுகளை
ஆனால் ஒரு நாளும் உண்டதில்லை
நம் வீட்டு உணவுகளை!
ஆயினும் நம் வயிரு நிறைந்திருக்கும்
நம் தோழியின் ஒரு கைப்பிடி தயிர் சாதத்திலும்
எலுமிச்சைச் ஊறுக்காயிலும்!

நீங்கள் பேசிப் போன வகுப்பறைகள்!
துள்ளித்திரிந்த விடுதி அறைகள்!
சுற்றித்திரிந்த நம் பல்கலைக்கழக வளாகங்கள்!
உம் பேச்சு சத்தத்தால் கல கலத்த கேன்டின்கள்!
எங்களை உற்சாகப்படுத்திய விளையாட்டு திடல்கள்!
இவையாவும் தலைமுறைகளைக் கடந்தும் உம் பெயரைச் சொல்லும்!

இமையின் பிரிவில் தான் ஒளிப் பிறக்கும்!
பூவின் பிரிவில் தான் நல்ல பூமாலைப் பிறக்கும்!
விரலின் பிரிவில் தான் குழலிசைப் பிறக்கும்!
கருவரைப் பிரிவிருந்து தான் சிசுவின் புது உலகு பிறக்கும்
இவ்வாறே
வகுப்பறைப் பிரிவிலிருந்து தான் தங்களின்
புது வாழ்வும் பிறக்க காத்துக் கொண்டிருக்கின்றது!
கலங்காது செல்லுங்கள்
நாளைய
விடியல் உங்களுக்காக!

எழுதியவர் : புவபாரதி (22-Apr-18, 4:21 pm)
பார்வை : 564

மேலே