நீயே சொல்

காலையில் கிழக்கே பணிதொடங்கி
காசினி முழுதும் ஒளிகொடுத்து,
மாலை வானை அழகாக்கி
மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
மேலைக் கடலில் பணிமுடிக்கும்
மேன்மை மிக்கக் கதிரவனே,
வேலை செய்யா மனிதரவர்
வாழ்ந்திட வழியைச் சொல்வாயே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Apr-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 237

மேலே