எவரும் செய்யாத ஊழல்கள் அல்லது எல்லாம் அவன் செயல்

எவரும் செய்யாத ஊழல்கள் ( அல்லது ) எல்லாம் அவன் செயல்!


டூஜீ கேசில் ஊழல் ஆனால்
மாஜி மந்திரி செய்யவில்லை
ஊரே அறிந்த பீரங்கி ஊழல்
யார்செய் தாரதை ? தெரியவில்லை

கார்கில் போரின் தியாகி களுக்கு
சேர வேண்டிய வீடுகளும்
யார் யாருக்கோ சேர்ந்தது ஆனால்
யாரும் குற்றம் செய்யவில்லை!

நிலக்கரி ஊழல் உண்மை ஆனால்
தலைவர்கள் தவறெதும் செய்யவில்லை.
காமன் வெல்த்விளை யாட்டு க் கணக்கில்
ஏமாற் றியவர் யாருமில்லை!

கல்லறைப் பெட்டி ஊழலில் எவரும்
சில்லறை கூட வாங்கவில்லை.
கனிமம் எடுப்பதில் ஊழல், உண்மை ;
எனினும் எவரும் செய்யவில்லை !

கல் எடுக்கும் ஊழலில் எவரின்
கல்லாப் பெட்டியும் ரொம்பவில்லை!
நதியடி மணலும் காணாய்ப் போச்சு,
சதிகாரர் அதில் எவருமில்லை !

வங்கியில் பெருங்கடன் வாங்கிய வர்கள்
இங்கே எங்கும் தங்காமல்
இங்கிலாந் ஹாங்காங் ஓடிச் சென்றால்
எங்களைச் சாடி என்னபயன்?

எல்லா ஊழலும் நடந்தது உண்மை
ஆனால் செய்தவர் யாருமில்லை
தானாய் நடந்த தவறுகள் இவையே
போனால் போகட்டும் விட்டுவிடு!

நினைத்ததைப் பார்த்து நாளும் வருந்தி
நடக்கப் போவது ஒன்றுமில்லை
"அனைத்து மவன்செயல்", நாமென் செய்வோம்
நாட்டின் ஜாதகம் சரியில்லை!

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (23-Apr-18, 9:56 am)
பார்வை : 67

மேலே