மரணங்கள்

பனித்துளிகள் அடங்கிய
பார்கடலில் மிதக்க வேண்டிய
பாய்மரக் கப்பலுக்கு -- பாதையின் மேல்
படர்ந்து செல்ல ஆசை வந்தது! வெறும்
பாதங்கள் தீண்டுவதையே வெறுக்கும்
பாதையிடம் பாய்மரக் கப்பலின்
ஆசை அரங்கேற்றமாகாமல்
அழிந்ந போது முதல் மரணம்......

தான் அறியாத பிறர் தகுதியும்
தன்னை அறிந்த தன் தகுதியும்
எப்போதும் எந்நிலையை-- என்னிடம்
எடுத்துரைக்கும்
தாழ்வுமனப்பான்மை என்ற மரணம்...

மனமென்ற பூந்தோட்டத்தில்
மறைத்து வைத்த மலரொன்றை
களவாடி கைகள் ஏந்தி
மலர்சூட வந்தவன்
மனம் வாடி வெளியேறிய மரணம்...

வேதனையென்ற மரணம்
வெளிவந்த சோகத்தை
வேண்டாமென்று விளிக்கி வைத்த
விருப்பமில்லா மரணம்.....

ஏகாந்த நாட்களில்
என்னை மீறும் நினைவுகளில்
நிதானமான மரணம்.....

விழியில் விழிக்கவந்த வேளையில்
வலிகள் மொழியின்றி தவித்த
தன்னையெறித்த மரணம்.........

ஆயிரம் கேள்விகள்
என்னிடம் இருந்தும் -- அதற்கெல்லாம்
விடையில்லம் இருக்கும்!
விதியின் மேல்
விடாத கோபம் கொண்ட மரணம்.....

நேரங்கள் இருந்தும்
நிற்க முடியாத நிழலை
நிஜம் மறுத்த மரணம்.........

அழைக்க உரிமையின்றி
அலைந்து வந்த ஜிவனிடம்
ஜென்மங்களின் மரணம்........

தீயில் சுடாத வார்த்தையொன்று
திங்களால் சுட்டபோது
சுற்றியிருந்த சூழ்நிலைகளை வெறுத்த
மரணம்.......

நினைத்து மகிழ்ந்த நாட்கள்
நிறைவேற வந்த நாளில்
நீ வேறென்று
நான் வேறென்று
வேற்றுமை கண்ட மரணம்....

சொர்கமென்று கண்டெடுத்த
சொந்தமொன்று
எதையும் சொல்லாமல்
என்னை கொல்லும் மரணம்....

தினந்தோறும் வரைந்த
ஓவியமொன்றை-- வண்ணம் தீட்ட
வாய்யில்லாத மரணம்.....

விரல் தொட்டு போகமுடியாமலும்
விட்டு கொடுத்து போகமுடியாமலும்
அழுது தவிக்கும்
விருப்பமொன்றின்
வித்தியாசமான மரணம்.......

இமைமூடும் இரவோடும்
இன்றியமையாத கனவோடும்
இன்னல் பட்டு வாழும்-- வண்ணமில்லா
இரவின் வார்த்தைகள் சொல்ல முடியாத
மரணம்......

ஓடிவரும் உறவென்றும்
தேடிவரும் உயிரென்றும்
தெருவோரம் வந்து
தேய்ந்து போகும் பாதையோடு!
நாடிச் செல்லும் மரணம்.....

அழுக்கு படிந்த என்னிடத்தில்
அனுதினம் வழக்கொன்று
வரும்போது-- வாய் திறந்து
பேச முடியாமல் வாழ்வை எறிக்கும்
மரணம்.....

அசையாத இதழொன்றில்
இசையாத வார்த்தையொன்று
வெளிவர காத்திருக்கும்
காலங்களின் கண்ணீர் மரணம்.....

ஒரு வானில்
இரு கிரகங்கள் ஒன்றோடொன்று
உரசாமல் போகும்
பிரிவின் மரணம்.....

கைநீட்டும் அளவில்
காகிதம் ஒன்றில்
கவிதையெழுத விரல் செல்லாத
வரியின் மரணம்.....

வந்த பாதையில்
வாழ்ந்து பார்க்கும் மரணம்...
வாழும் நாட்களில்
சாகும் மரணம்...
படைப்புகளை பதிக்கும்
மரணம்....
பார்வையாளர்கள் பரிதவிக்கும்
மரணம் என
ஒரு போதும் நேசிக்காத மரணத்தை
ஒவ்வொறு நொடியும்
வெறுக்கும் போது--- நெஞ்சோரத்தில்
"தீ ஒன்று" நெருப்பாக என்னை எறிக்கும்
எந்தன் மரணங்கள்.........................
......................................................................
....................................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Apr-18, 7:26 pm)
பார்வை : 115

மேலே