சில தியானங்கள் - ௧௫-௦௪-௨௦௧௮

தோல்வியை ஒப்புக் கொள்வாய்
+++துவண்டுநீ போக மாட்டாய்!
சால்வையாய்ச் சங்க டத்தைச்
+++ சற்றது மூடி வைக்கும்;
மேலும்நீ எடுக்க வுள்ள
+++முயற்சிகள் உனக்குள் தோன்றும்;
பாலமில் லாத போதும்
+++பயிற்சிகள் முயற்சி கூட்டும்!

அயர்ச்சியை விலக்கி வைக்க
+++அனுதினம் பழகிக் கொள்க!
முயற்சிக்குக் கைகொ டுப்பார்
+++முன்வைத்துச் செயல்கள் செய்க!
துயர்ச்சிறை விலகிப் போகும்
+++ துன்பமும் உதவி யாகும்!
பெயர்ச்சியால் தீர்வு கிட்டும்
+++பேதமை எண்ணம் நீக்கு!
===== +++++ ==========

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியேல் (23-Apr-18, 7:31 pm)
பார்வை : 66

மேலே