காதல்

நான் தென்றலாய் வந்து
உன்னைத் தீண்டும்
இன்பம் பெறவா
நீராய் மாறி
உன்னை நீராடவைக்கவா
தேன் வண்டாய் மாறி
உன் கொண்டையில் அமர்ந்திடவா
உந்தன் கூந்தலின்
வாசத்தில் மனம் மகிழ்ந்திடவா
கடல் அலையாய் வந்து
உந்தன் பாதத்தின் அழகில்
மனம் லயிக்கவா
கிளியை மாறி
உன்னோடு கிள்ளை மொழி பேசி
கொஞ்சிக் குலாவிடவா
என்னைக் கண்டும்
காணாதது போல்
நீ நித்தம் நித்தம்
என்முன் நின்று மறைந்தால்
உன்னைக் கடத்திச்சென்று
கலியாணம் புரிந்திடவா
என்ன செய்ய, ஏது செய்ய
என்று ஒன்றும் தெரியாது
நிலையில்லா மனதனாய்
பித்தாய் அலைகின்றேனடி
உன் காதலுக்காய்
மனம் கனிய மாட்டாயா
என் தனிமை போக்கி
என் வாழ்விற்கு இன்பம் சேர்த்து
என்னவளாய் எப்போதும்
என் உள்ளத்தில் கலந்திட
வா எந்தன் காதல் கண்மணியே
அந்த நிலவைக் கேளடி-அது சொல்லும்
என் இதயத்தில்
உன்னையன்றி மற்றோர் பெண்
கனவிலும்கூட தப்பாய்என் மனதில்
வந்து உறவாட வழியில்லை என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Apr-18, 3:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 223

மேலே