பொன்மாலையில் வரமாட்டாள்

கண்களில் காதல் மொழிபே சிடுவாள்
கனவுத் திரையினில் ஓவிய மாய்ஆவாள்
புன்னகையில் பூந்தோட்டம் போடுவாள் ஆனால்
வரமாட்டாள் பொன்மாலை யில் !
---பலவிகற்ப இன்னிசை வெண்பா .

மின்விழியில் காதல் மொழியினில் பேசிடுவாள்
மென்கன வின்திரையில் ஓவிய மாய்ஆவாள்
புன்னகையில் பூந்தோட்டம் போடுவாள் ஆனாலும்
பொன்மாலை யில்வரமாட் டாள் !

---இப்பொழுது ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-18, 7:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே