காதல் கீதம்

ஸ்ருதியோடு ராகம்
தாளம், லயத்தோடு
தருமே சுகம் தரும் கீதம்
கீதம் சங்கீதம்
காதல் கீதம்

மெல்ல மெல்ல
மனதில் வந்து மோதும்
ஓடும் நதி அலைகள் போல
சேர்த்திடுமே ஆனந்தம்
மோக ராகம், மோகன ராகம்
காம கீதம்-அது
மாறிடும் காதல் கீதம் ,
கீதம் சங்கீதம்
காதல் கீதம்

கண்ணன் குழலோசை
அது தரும் ராக கீதம்
அதில் மயங்கும்
ஈரேழு லோகம்-அது
அவன் ராதையின்
மனதையும் கொள்ளைக்கொண்டு
அவன் மனதோடு சேர்க்கும்

கீதம் சங்கீதம் -அது
மாய கீதம்
காதல் கீதம்

நான் பாடும் ராகம்
காதல் கீதம் -என்னவள், அவளுக்காக
கடல் அலை கடற்கரை மணலை
தழுவிடுவது போல் -என் கீதம்
அவள் மனதை வருடி,திருடி
என் மனதில் சேர்த்திடுமே

கீதம், சங்கீதம்
நான் பாடும் காதல் கீதம்
என்னவள் அவளுக்காக
என் மனத்தைக் கவர்ந்த
என் ராதைக்காக
கீதம் சங்கீதம்
காதல் கீதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-18, 7:38 am)
Tanglish : kaadhal keetham
பார்வை : 282

மேலே