சிண்டு பாடும் வண்டுக்கு

சிண்டு பாடும் வண்டுக்கு
சின்ன சின்ன ஆசை
சிங்கார பூக்களையே
சிறை பிடிக்க ஆசை
செம்பவள இதழ் கொண்டு
சிந்தாது சிதறாது தேனருந்த ஆசை

வண்ண நிலவொளி
தன்னில் வட்டமிட ஆசை
நிலவே என்னிடம் மயங்காதே
என்று சொல்லி விட ஆசை
நான் பாடும் பாடலுக்கு
நல்ல தமிழ் சொல்லிருக்கு
ரீங்காரம் அது ரீங்காரம்
,
என் குரலில் மயங்குவதும் மலர்தான்
அந்த மயக்கத்திலே நான் அமர்ந்து
அருந்துவதும் தேனே
தேன் அருந்தும் போதையிலே
சிலிர்த்திடும் என் மேனி

சிட்டுப் போல் பறந்து சென்று
மீண்டும் வந்துவிட ஆசை
ஆயுள் எல்லாம் என் ஆசை
அமுதம் எனும் தேனுக்காய்
சிண்டு பாட ஆசை ,

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Apr-18, 11:31 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 73

மேலே