மாறாத தோற்றம்

காற்றுப் புகும்
இடமெல்லாம்
உன் ஞாபகங்கள்
என்னுடம்பில்
நுழைந்து என்னைத்
துவம்சம் செய்யுதடி,

அதே குளிக் கன்னம்
குறும்புச் சிரிப்பு
குகையில் கோலோச்சும்
சுவர்ச் சிற்பமாய்
அன்று முதன் முதலில்
உன்னைக் கண்ட
அதே வசீகரம்
இன்னும் உன்னுடலில்
மின்னி மினுங்குதடி
என்னைஇங்கே
பின்னிப் பிடுங்குதடி

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (28-Apr-18, 2:57 pm)
Tanglish : maaradha thotram
பார்வை : 317

மேலே