உழைப்பாளி

ஆண்டவனால் கொடுக்கப்பட்டதென்று
அழைக்கும் ஆயுள்ரேகையை
முழுவதும் அறியும் முன்பே!
கரங்ளிலிலுள்ள ரேகைகள்
அழிந்துவிடுகின்றது--
என் உழைப்பாளிகளுக்கு...!!

வியர்வை துளியின்
இறுதி சொட்டு இறங்கும் வரை
இவ்வுலகில் என் உழைப்பாளி
உறவுகளுக்கு உயர்வென்பது கிடையாதா?...

வேகாத வெயிலாக இருந்தாலும்
வெளிவர தயங்கும் மழையாக இருந்தாலும்
வேற்றுமையென்று எதுமின்றி-- இணைந்து
வாழும் என் சொந்தங்கள்
சொர்கமென்று ஏதேனும்
தன் வாழ்நாளில் காண்பார்களா?.....

காகிதமயமாகும்
இவ்வுலகத்தில்
உண்ணும் கஞ்சிக்காக
உழைப்பை விற்கும்
அவன் சந்ததிகள் சந்தோசம் காணுமோ!..

"ஆயிரம் நவினங்கள் "
வளர்ச்சியடைந்தபோதும்-- அதில்
எதையும் இவன் கண்டிருப்பானா?
நவினம் என்பதை
அவனின் வாழ்வில் கண்டிருந்தால்!
அவனின் குடும்பங்கள்
இங்கு இன்னும்
குடிசைகளில் வாழாது!!

எழில் பொங்க இறைவனால்
அமைக்கப்பட்ட இந்ந அகிலத்தில்
ஏற்றத் தாழ்வான எத்தனையோ
அதிசயங்கள்-- அதைநாம்
உணர வேண்டியது நமது அவசியம்...!!

கோடிகளின் வளர்ச்சியால்
கோபுரங்கள் இன்னும்
வளர்ந்துக்கொண்டிருக்கின்றது...!
கொடுமைகளின் வளர்ச்சியால்
வாழும் குடிசைகளுக்கு
வசதி கிடைக்காமலே
வாழ்வை துறந்துக்கொண்டிருக்கின்றது...!!

உயரும் கோபுரங்களை மட்டுமே
தலைதூக்கி பார்ப்பவர்களே...
வாழ்நாள் முழுவதும்
உழைப்பவர்களின் குடிசைகள் மடிவதையும்
சற்று தலைகுணிந்து பாருங்கள்...

உன்போல் ஒருவரின்
உயிரணுவில் தான்
நாங்களும் உலகில் உதயமானோம்...!!

ஏனோ சில காரணங்களால்
நீங்கள் வாழும் வீதியோரம்
இருகின்றீர்கள்...!
நாங்கள் வாடும் வீதியோரம்
இருக்கின்றோம்...!!

என்போல் மனிதன் தானேயென்று
மாற்றம் கொண்டு ஊங்களை மாற்ற
நீ நினைத்தால்
நம் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்...!
ஏதோ ஒருவர் தானேயென்று
நீ நினைத்தால்
என் வாழ்க்க ஏமாற்றம் அடையும்...!!

உன் போல் சிலரை
நான் சந்திக்க முடியாமல் போனாலும்
என்போல் "உழைப்பாளர்களின்" உணர்வை
உன்னால் சிந்திக்க முடியும்...!
நீ நினைத்தால்
அதனை சிதறடிக்க முடியும்...!!
சிந்தனை செய்ய முற்படு(வோம்)...!!

--- இப்படிக்கு----
உழைப்பாளியின் உதிரத்தில் உதித்த
-- பிரசாந்த் பிரியன்---

( எத்தனைக் கோடிகள் குவிந்தாலும் இவ்வுலகில் உறங்குவதற்கு கொடுக்கப்படும் இடம் கொஞ்சம் தான். அதை கொஞ்சம் உணருங்கள். மிஞ்சுவதை கொடுத்து இல்லாதவர்களுக்கு உதவுங்கள்)

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-May-18, 7:37 pm)
Tanglish : uzhaippaali
பார்வை : 2073

மேலே