முதுமொழிக் காஞ்சி 60

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இரப்போர்க் கீதலின் எய்துஞ் சிறப்பில்லை. 10

- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் இரப்போர்க்குக் கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை.

'கொடுப்பதின் மிகத் தாம் எய்தும்' - பாடபேதம்.

பதவுரை:

இரப்போக்கு - யாசிப்பவர்க்கு, ஈதலின் - கொடுப்பதைக் காட்டிலும்,

எய்தும் - ஒருவன் அடைதலான, சிறப்பு - மேன்மை, இல்லை -வேறில்லை.

ஈகை போல் புகழ்தருவது வேறில்லை என்பதாம்.

உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்(று)
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 புகழ்

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-18, 10:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே