மிச்சம் வைத்த கள்ளிப்பால்

பள்ளியில் பயில,
மஞ்சள் நீராட்டு விழா,
கல்லூரியில் கற்க,
வேலைக்கு வைப்பு,
வரண் தேடும் தரகர் தரகு,
வரதட்சணை,
திருமணச் சடங்கு செலவு,
குலதெய்வ கடாக் கறி,
மறு வீட்டு பண்ட சீர்,
தலை தீபாவளி,
தலை பொங்கல்,
தலை வருடப் பிறப்பு,
தலை பிறந்த நாள்,
தலை மாங்கல்ய நோன்பு,
பேறு கால பராமரிப்பு,
வளைகாப்பு நலங்கு
பிரசவ அறை முன் பதிவு,
பச்சிளம் புது வரவு செலவு,
பெயர் வைக்கும் படலம்,
தாய் வீட்டு சீர்,
பின் அவள் ஈன்றதற்கு
கடன் கழிக்க..

"அப்பா எப்படி இருக்கீங்க?" என்று
மகள் கேட்கும் போதெல்லாம்..
"நான் நல்லா இருக்கேன்டா சாமி,
நீ எப்படி'மா இருக்க?"
என்று கண்களில் நீரோடு,
ஓர் குரல்..

அவளுக்கு மட்டும் தான்
தீராத வலி,
தன் தந்தையை
கடனுக்கு தாரைவார்த்து!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (2-May-18, 2:24 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 379

மேலே